3 மாதங்கள் வீட்டுக்கடன் மாதத்தவணை கட்டவில்லையா? இதெல்லாம் நடக்கும்!

நம்மில் பலருக்கு சொந்த வீடு என்பது ஒரு பெரும் கனவாக இருக்கும் என்பதும் அந்த சொந்த வீட்டை வாங்குவதற்கு கஷ்டப்பட்டு சேமித்த பணத்தோடு வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவது பலருக்கும் வழக்கமாக உள்ளது.

சொந்த வீடு வாங்குவதற்கு வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கடன் கொடுத்தாலும் அந்த பணத்தை சரியாக கட்டாவிட்டால் அந்த வங்கி எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட பின் கடன் வாங்கவேண்டும்.

48 மணிநேரத்தில் 3 வெளிநாட்டு விமானங்கள் கோளாறு.. அவசர அவசரமாக தரையிறக்கம்..!

தொடர்ந்து மூன்று மாதங்கள் வீட்டு கடன் தவணை கட்டாவிட்டால் என்னென்ன நடக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.

வீட்டுகடன்

வீட்டுகடன்

வீட்டு கடன் வழங்குவதற்காக தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தனியார் நிறுவனங்கள் தயாராக இருப்பதால் வீட்டு கடன் வாங்குவது என்பது மிகவும் எளிதாகவே இருக்கும். ஆனால் அந்த கடனை திருப்பி சரியாக கட்ட வேண்டும் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

3 மாதங்கள் வரை

3 மாதங்கள் வரை

தொடர்ந்து 3 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வீட்டுக் கடனை கட்டாவிட்டால் நம்முடைய கனவு வீடு நம் கையை விட்டுப் போய்விடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். வீட்டுக் கடனை மூன்று மாதங்கள் கட்டவில்லை என்றால் அது ஒரு சிறிய தவறாகவே கருதப்படும். இதற்கு வங்கி உங்களுக்கு எஸ்எம்எஸ், இமெயில் மற்றும் தொலைபேசி மூலம் ஞாபகப்படுத்தும்.

3 மாதங்களுக்கு மேல்
 

3 மாதங்களுக்கு மேல்

ஆனால் அதே நேரத்தில் மூன்று மாதங்களுக்கு மேல் தவணை கட்டவில்லை என்றால் வங்கி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்பதும், அது ஒரு பெரிய தவறாக கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 வீடு பறிமுதல்

வீடு பறிமுதல்

மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் வீட்டு கடனுக்கான மாதத் தவணை கட்டாவிட்டால் உங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மீதமுள்ள வீட்டுக் கடனுக்காக வீடு ஏலம் விடுவது உள்பட ஒரு சில செயல்முறைகளை தொடங்கலாம்.

அபராதம்

அபராதம்

அதுமட்டுமின்றி நிலுவையில் உள்ள வீட்டுக் கடன் தவணைத்தொகையை செலுத்த தாமதம் ஆகும் போது அபராதம் விதிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து கொள்ளவேண்டும். மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டு கடன் மாத தவணை செலுத்தாதவர்கள் அதிக அபராதத்துடன் மீதமுள்ள கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்..

அவமானம்

அவமானம்

மேலும் வீட்டுக் கடனை வசூலிக்க சில வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களை நியமனம் செய்து இருப்பதால் அந்த நிறுவனங்கள் மிகவும் அநாகரிக முறையில் வீட்டுக் கடனை வசூல் செய்ய களத்தில் இறங்கும். அது கடன் வாங்குபவர்களுக்கு அவமானமாக இருக்கலாம்.

சட்டம்

சட்டம்

வீட்டு கடன் உள்பட எந்த கடன் வாங்கி இருந்தாலும் அவரை அச்சுறுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சட்டம் கூறினாலும் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் இதனை கடைபிடிப்பதில்லை. எனவே வீட்டு கடன் வாங்கியவர்கள் சரியான நேரத்தில் தவணைகளை கட்டிவிடுவதே இந்த பிரச்சனைக்கு உள்ள ஒரே தீர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர்

மேலும் வீட்டு கடன் வாங்கியவர்கள் சரியான முறையில் மாதத்தவணை கட்டாவிட்டால் அவர்களுடைய கிரெடிட் ஸ்கோர் மிக மோசமாக பாதிக்கும் என்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். கிரெடிட் ஸ்கோர் சரியான முறையில் இருந்தால் தான் அடுத்த முறை கடன் வாங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிட்டால் கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது மட்டுமன்றி கடனுக்கு அதிக வட்டியையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

 தவிர்ப்பது எப்படி?

தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய நிதி நிலைமை சரியில்லாமல் போனதால் வீட்டுக்கடன் தாமதமானால் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி தவணைகளை செலுத்தலாம். ஆயுள் காப்பீடு, பிக்சட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்து இருந்தால் அதில் கடன் வாங்கி அல்லது அதை முடித்து கொண்டு அதில் கிடைக்கும் பணத்தை வீட்டுக்கடன் தவணையை செலுத்திக் கொள்ளலாம். அல்லது தங்கம் சேமிப்பாக இருந்தால் அதை அடமான வைத்து அல்லது விற்று வீட்டு மாதத்தவணைகளை கட்டிவிடலாம்.

 வீட்டை விற்று விடலாம்

வீட்டை விற்று விடலாம்

நம்முடைய நிதி நெருக்கடி பல மாதங்களுக்கு அல்லது ஒருசில வருடங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் வீட்டை விற்பதை தவிர வேறு வழியில்லை. இந்த நேரத்தில் வீட்டை சந்தை விலைக்கு விற்று விட்டு பாக்கியுள்ள தவணைகளை முழுவதுமாக கட்டி விட்டு மீதமுள்ள பணத்தை வைத்து கொண்டு ஒரு நல்ல வீட்டிற்கு வாடகைக்கு சென்று விடலாம் என்பதுதான் ஒரே வழி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What happens when your home loan EMIs are delay payment?

What happens when your home loan EMIs are delay payment? | 3 மாதங்கள் வீட்டுக்கடன் மாதத்தவணை கட்டவில்லையா? இதெல்லாம் நடக்கும்!

Story first published: Tuesday, July 19, 2022, 8:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.