கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடுமையான கடல் சீற்றம் காரணமாக பல வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன.
ponnani கடற்கரையோர பகுதிகளில் தற்போது கடல் அலைகள் கடும் ஆக்ரோசத்துடன் கரையை நோக்கி சீறி வருகின்றன. இதனால் கரையில் உள்ள வீடுகளில் கடல்நீர் புகுந்துள்ளது.
மேலும் வீடுகள் இடிந்தும் தென்னை மரங்கள் வேரொடு பெயர்ந்தும் கீழே விழுந்தும் காணப்படுகின்றன.
கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் அனைவரும் உரிய பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.