ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைபர்சோனிக் ஏவுகணையை சோதித்து பார்த்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Raytheon தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்த ஏவுகணையை சோதித்து பார்த்ததாகவும், 2013 முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி என்றும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
HAWC வகை வான் சாதனங்களை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இவ்வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் வளிமண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் ஆற்றல் கொண்டவை எனக் கூறப்படுகிறது.