இயக்குநர் மணிரத்தினத்திற்கு கொரோனா

இயக்குனர் மணிரத்னம்(66) தனது படைப்புகளால் இந்திய அளவில் பேசப்பட்டவர். தற்போது கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்., 30ல் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு இருந்தார் மணிரத்னம்.

இந்நிலையில் மணிரத்தினத்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.