இந்திய ரூபாயின் மதிப்பு 80 -ஐ கடந்து மீண்டும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து 77 ரூபாயில் இருந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. இது மேற்கோண்டு வீழ்ச்சி காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூபாயின் மதிப்பு சுமார் 80 ரூபாய் என்ற வலுவிழந்த நிலையில், இன்னும் வலுவான லெவலிலேயே காணப்படுகின்றது.
வரலாற்று சரிவில் ரூபாயின் மதிப்பு.. அன்னிய முதலீடு வெளியேற்றம்.. என்ன காரணம்..?!
எவ்வளவு வீழ்ச்சி?
இன்று காலை தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பானது 80.0163 ரூபாய் வரையில் வீழ்ச்சி கண்டு காணப்பட்டது. இதன் ஆல் டைம் லோவாக 80.05 ரூபாயாக உள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து 7வது அமர்வாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. இது பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையின் ஏற்ற இறக்கம் மத்தியில் இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
7% வீழ்ச்சி
நடப்பு ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பானது 7% சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து வரலாறு காணாத சரிவினைக் கண்டு வருகின்றது.
இது அதிகரித்து வரும் பணவீக்கம்,வர்த்தக பற்றாக்குறை, டாலர் மதிப்பு ஏற்றம் என பல காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. மேலும் சர்வதேச சந்தையில் நிலவும் ரெசசன் அச்சம் காரணமாக பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதுவும் ரூபாய் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
முதலீட்டாளர்களை எப்படி பாதிக்கலாம்?
தொடர்ந்து ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், பங்கு சந்தைகள் சரிவினை எட்டலாம். இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி சந்தையில் இருந்து வெளியேற வழிவகுக்கலாம். இதனால் முதலீட்டாளர்கள் நஷ்டத்தினை எதிர்கொள்ள வழிவகுக்கலாம். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. ஏற்கனவே ரெசசன் அச்சம், அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கை, பணவீக்கம் என பல காரணிகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன.
என்ன அட்வைஸ்?
ரூபாயின் மதிப்பு நடப்பு ஆண்டில் மேற்கொண்டு சரிவினைக் எட்டலாம் என பல தரப்பு நிபுணர்களும் கணித்து வருகின்றனர். ஆக இந்திய முதலீட்டாளர்கல் டாலர் அடிப்படையிலான முதலீடுகளை திட்டமிடலாம். இது நஷ்டத்தில் இருந்து உங்களை பாதுகாக்க வழிவகுக்கும்.
பணவீக்கம் தான் முக்கிய பிரச்சனையே
ரூபாயின் சரிவால் மேற்கொண்டு இந்தியா எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனை பணவீக்கம் தான். இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 80% இறக்குமதி மூலமே பெறுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர்களுக்கு அருகில் உள்ளது. இது இன்னும் பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம். இது வட்டி விகிதத்தினை தூண்டலாம்.
விலை அதிகரிக்கலாம்
இறக்குமதி பொருட்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் காரணமாக இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கலாம். உதாரணத்திற்கு கச்சா எண்ணெய் விலை, உதிரி பாகங்கள், மின்னணு பொருட்கள், சமையல் எண்ணெய், உரங்கள், மருத்துவ மூல பொருட்கள் உள்ளிட்ட பலவற்றின் விலை அதிகரிக்கலாம்.
தேவை குறையலாம்
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் மக்களின் வாங்கும் திறன் குறையலாம். இது தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தேவை குறைந்தால் அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
நிறுவனங்கள் பாதிக்கப்படலாம்
மேலும் நிறுவனங்கள் ஆஃப்ஷோர் மூலமாக பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி சுமை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக திரும்ப செலுத்தும் திறன் பாதிக்கலாம். இது நிறுவனங்களின் வளர்ச்சியினை பாதிக்கலாம். இது மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
கல்வி & சுற்றுலா செல்வோருக்கும் பிரச்சனை
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது, வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் செலவினை கொடுக்கலாம். இது முன்பு திட்டமிட்டிருந்ததை காட்டிலும் செலவு அதிகரிக்கலாம். ஆக வெளிநாடுகளில் சென்று படிக்க திட்டமிடும் மாணவர்களும் இதனால் பாதிக்கப்படலாம். இதேபோல வெளிநாடு சுற்றுலா செல்வோருக்கும் செலவினங்கள் அதிகரிக்கலாம்.
என் ஆர் ஐ களுக்கு பலன்?
என் ஆர் ஐ-கள் இந்தியாவுக்கு பண பரிமாற்றம் செய்யும்போது, ரூபாயின் மதிப்பில் அதிகம் அனுப்பலாம். இது அவர்களுக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இதே போல ஏற்றுமதி செய்வோருக்கும் கட்டணமாக ரூபாயில் செலுத்தப்படுவதால் அவர்களுக்கு பலன் கிடைக்கலாம்.
என்ன பிரச்சனை?
அன்னிய செலாவணி என்பது குறைய வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு ரூபாய் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு ரூபாய் சரிவுக்கு வழிவகுக்கலாம். இது இறுதியாக அன்னிய முதலீடுகள் வெளியேற காரணமாக அமையலாம்.இது தொடர்ந்து சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
Rupee Depreciation Beyond 80: How will it affect the common peoples?
Rupee Depreciation Beyond 80: How will it affect the common peoples?/80-ஐ தொட்ட ரூபாய்.. சாமானிய, நடுத்தர மக்களுக்கு என்ன பாதிப்பு..!