இந்தியாவில் உற்பத்தித் துறையை மேம்படுத்தி அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்த திட்டம் தான் இந்த PLI திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் உற்பத்தி தளத்தை அமைக்கும் முதலீட்டு தொகைக்கு ஏற்ப அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படும் என்பது தான் இத்திட்டத்தின் அடிப்படை.
இதன் படி மத்திய அரசு இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத் தேவையாக இருக்கும் பேட்டரி-யை உற்பத்தி செய்ய PLI திட்டத்தை அறிமுகம்
இந்தியாவின் பொம்மை உற்பத்தி துறை.. ஏற்றுமதி, இறக்குமதி நிலை என்ன தெரியுமா?
PLI திட்டம்
இந்தப் பேட்டரி தயாரிப்பு PLI திட்டத்திற்குப் பல நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்த வேளையில், மத்திய அரசு தகுதி வாய்ந்த நிறுவனங்களை முதல்கட்ட சோதனையில் ஆய்வு செய்து, யார் விரைவாகத் தொழிற்சாலையை அமைக்க முடியும் என்பது அறிவித்துச் சில நிறுவனங்களைத் தேர்வு செய்தது.
4 நிறுவனங்கள் தேர்வு
சுமார் 18,100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த PLI திட்டத்திற்கு மத்திய அரசு மார்ச் 2022ல் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி, ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி ஆகிய 4 நிறுவனங்களை மத்திய அரசு பல கட்ட ஆலோசனை, ஆய்வு செய்து தேர்வு செய்தது.
ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ்
இதில் ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ் நிறுவனம் பெயரை பார்க்கும் போது கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய்-யின் கிளை நிறுவனம் என மத்திய அரசு நம்பிய நிலையில்,இது ஒரு போலி நிறுவனம் எனத் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
போலி தரவுகள்
ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ், தென் கொரிய நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் என்று PLI திட்டத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பித்தது, இதில் இந்நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்தின் டிரேட்மார்க், பெயர், லோகோ என அனைத்தையும் பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளது. இதுக்குறித்து விசாரணை செய்யவும், அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஹூண்டாய் விளக்கம்
இதேவேளையில் கொரிய நாட்டின் ஹூண்டாய் மோட்டார் மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் PLI திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ள ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, மேலும் எங்களுடைய கிளை நிறுவனமோ அல்லது அங்கிகரிக்கப்பட்ட நிறுவனமோ இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வாய்ப்பு
இதன் மூலம் ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ் தற்போது 18,100 கோடி ரூபாய் மதிப்பிலான பேட்டரி உற்பத்தி செய்யும் PLI திட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் ஏற்கனவே இப்பிரிவு திட்டத்திற்கு விண்ணப்பம் அளித்த மஹிந்திரா & மஹிந்திரா, எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் & டயூப்ரோ, அமரா ராஜா பேட்டரீஸ், இந்தியா பவர் கார்ப் ஆகிய நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று தேர்வு செய்யப்படும்.
Hyundai Global Motors is not linked with Hyundai; Big problem in PLI proposals
Hyundai Global Motors is not linked with Hyundai; Big problem in PLI proposals ஹூண்டாய் பெயரில் போலி நிறுவனம்.. அதிர்ந்துபோன மத்திய அரசு..! #PLI