தனுஷ்கோடி அருகே தவித்த அகதிகள்.. மீட்டு போலீசாரிடம் ஒப்படைப்பு..!

தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் வந்து இறங்கிய 7 இலங்கை அகதிகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ முடியாமல் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதியின் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் இன்று தனுஷ்கோடி கடல் பகுதியில் உள்ள 3-வது மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளனர்.

அங்கு தவித்துக்கொண்டிருந்த 7 பேரையும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ஏற்றி வந்து ராமேஸ்வரம் கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர். 7 பேரிடமும், கடலோர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.