லண்டனில் வசிக்கும் 23 வயது கேரள பெண்ணுக்கு வந்த ஒரு நம்ப முடியாத இன்ப அதிர்ச்சி தகவல்! புகைப்படம்


உலகளவில் புகழ்பெற்ற மற்றும் கெளரவம் வாய்ந்த எம்மி விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் பெயர் பட்டியலில் லண்டனை சேர்ந்த கேரள பெண்ணின் பெயர் இடம்பிடித்துள்ளது.

அதன்படி 2022ஆம் ஆண்டுக்கான எம்மி விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் நிருபமா (23) என்ற கேரள பெண் இடம்பிடித்திருக்கிறார்.
சிறந்த ஒலி எடிட்டிங் பிரிவில் நிருபமா இடம்பிடித்துள்ளார்.

’தி டிண்டர் ஸ்விண்ட்லர்’ என்ற ஆவணப்படத்தில் தான் நிருபமா பணியாற்றியதன் மூலமே இந்த பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. எம்மி விருதுகள் செப்டம்பர் 12ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

லண்டனில் வசிக்கும் 23 வயது கேரள பெண்ணுக்கு வந்த ஒரு நம்ப முடியாத இன்ப அதிர்ச்சி தகவல்! புகைப்படம் | London Based Kerala Girl Nomination Emmy Awards

நிருபமா கூறுகையில், இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை, தகவல் அறிந்த பின்னர் உண்மையில் அதிர்ச்சியில் உறைந்தேன்.
எனது குடும்பத்தினருடன் மட்டுமே செய்தியை முதலில் பகிர்ந்து கொண்டேன்.

இந்த தருணம் மிக மகிழ்ச்சியானது என கூறியுள்ளார்.
நிருபமா கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் கேரளாவுக்கு வந்தார். நிருபமாவின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு ஸ்பெயின் மற்றும் லண்டனில் அமைந்தது.

பிரித்தானியாவின் வெஸ்ட் மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் சவுண்ட் இன்ஜினியரிங் துறையில் நிருபமா முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.