பிரபல இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார். அதில் முதல் பாகத்தை வெளியிடுவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மணிரத்னம் காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக மணிரத்னம் மனைவி சுஹாசினி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மணிரத்னத்திற்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தன்னுடைய தந்தைக்கு 92 வயது, அதே போல் தாய்க்கு 88 வயது. எனவே தனிமைப்படுத்துவது அவசியம் என்பதால் மருத்துவமனையில் இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். மேலும் மணிரத்னம் நலமாக இருக்கிறார் என சுஹாசினி தெரிவித்துள்ளார்.