Nothing Phone 1 ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேயில் பச்சை நிற நிழல்!

Nothing Phone 1 Green Tint: பெரிய ஆரவாரத்துடன் நத்திங் போன் 1 உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மீதான எதிர்பார்ப்புகள் அளவில்லாமல் இருந்தது. போனின் சிறப்பம்சங்களும், அதன் தனித்துவமான வடிவமைப்பும் பயனர்களை கட்டிப் போட்டிருந்தது.

இதற்கிடையில் ஒரு மோசமான செய்தி வெளியாகியுள்ளது. நீங்கள் Nothing Phone 1-ஐ வாங்க திட்டமிட்டிருந்தால், சில நாள்கள் பொறுத்திருப்பது நல்லது. நத்திங் போன் 1 வாங்கிய சில பயனர்கள் பச்சை நிற டிஸ்ப்ளே, செல்பி கேமரா சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக புகார் தெரிவித்துள்ளனர்.

நத்திங் போன் (1) டிஸ்ப்ளே பிரச்சினை

இந்த சிக்கலின் காரணமாக கிடைத்த மாற்று போனிலும் இதே பிரச்சினையை சந்தித்ததாக ஒரு பயனர் சுட்டிக்காட்டியுள்ளார். போனின் டிஸ்ப்ளேவின் இருண்ட பகுதி பச்சை நிறமாக மாறுகிறது என்பது தான் பெரும்பாலான பயனர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

மேலதிக செய்தி:
Instagram: டிஜிட்டல் கடைக்கு வழிவகை செய்யும் இன்ஸ்டாகிராம் – புதிய அம்சங்கள் அறிமுகம்!

இதனால் இந்த டிஸ்ப்ளே மோசமானது என்று அழைக்கப்படுகிறது. AMOLED பேனல்களுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்சினை எழுவது ஒன்றும் புதிதல்ல. சாம்சங் நிறுவத்தின் பிளாக்‌ஷிப் போனிலே, இதுபோன்ற பிரச்சினைகள் எழுந்து பின்னர் சரிசெய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

பிளிப்கார்ட்டில் இருந்து போன் வாங்கப்பட்டதாகவும், மாற்றி கொடுக்கப்பட்ட போனிலும் அதே பிரச்சினை இருப்பதாகவும் பயனர்கள் குமுறுகின்றனர்.

அறிமுகத்தில் இருந்தே சிக்கல் தான்

இதற்கு முன்னதாக போனை வாங்கிய ஒரே நாளில், ஒரு பயனர் போனுக்கு எதிராக போர்கொடி தூக்கியிருந்தார். ட்விட்டரில் NileshAbhang2 என்பவர் தான் புகைப்படத்துடன் போனுக்கு எதிராக பதிவிட்டது. IP53 மதிப்பீடு இருந்தபோதிலும், நத்திங் போன் (1) கேமரா அமைப்பு ஈரப்பதத்தை ஈர்த்ததாக அதில் கூறப்பட்டிருந்தது.

மேலதிக செய்தி:
iQOO 10 சீரிஸ் போன்கள் இன்று அறிமுகம் – என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

அவர் பின்னர், நத்திங் நிறுவனம் சம்பவம் குறித்து தொடர்பு கொண்டதாகவும், போனை மாற்றிதருவதாக நிறுவனம் கூறியிருப்பதாகவும் நிலேஷ் பதிவிட்டிருக்கிறார்.

மேலதிக செய்தி:
Elon Musk: ட்விட்டர் ஒப்பந்தம் ரத்து; பராக் அக்ரவாலுக்கு SMS அனுப்பிய எலான் மஸ்க்!

நத்திங் போன் 1 அம்சங்கள் – Nothing Phone 1 Specifications

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ 5ஜி புராசஸர்பின்பக்கம் ஒளிரும் விளக்குகள்90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட OLED டிஸ்ப்ளேகார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்OIS கேமராவுடன் முதன்மை சென்சார்4,500mAh பேட்டரி, பாஸ்ட் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உடன்விலை ரூ.31,999 முதல்ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான NothingOS நிறுவப்பட்டிருக்கும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.