5% ஜிஎஸ்டி உடனடியாக திரும்ப பெற வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீது விதித்துள்ள 5% ஜிஎஸ்டி யை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.

“ஒருபுறம், ஒட்டுமொத்த நாடும் பணவீக்கத்துடன் போராடுகிறது, மறுபுறம், மத்திய அரசு தினசரி பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரியைவிதித்து, அவற்றின் விலையை அதிகப்படுத்தியுள்ளது.

“உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்னர் முதல்வர் திங்களன்று கூறினார். இந்த நடவடிக்கை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

“ஒருபுறம் நாட்டில் பணவீக்கம் வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது, மறுபுறம் மத்திய அரசு பருப்பு, அரிசி போன்ற அடிப்படைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்தியுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் கோருகிறோம்” என்று கெஜ்ரிவால் கூறினார்.

“அடிப்படை பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்தும் நடவடிக்கை தவறான சிந்தனை மற்றும் தன்னிச்சையானது என்பதை மத்திய அரசுக்கு நான் கூற விரும்புகிறேன். அதை விரைவில் திரும்ப பெற வேண்டும்,” என்றார்.

ஆட்டா, பன்னீர், தயிர் போன்ற உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊழல் ஒழிக்கப்பட்டால், வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சமூக வலைதளங்களில் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நாட்டில்“ஊழலை ஒழித்தால், நாம் வரிகளைக் குறைக்க வேண்டும், வரிகளை அதிகரிக்கக்கூடாது. ஊழலை ஒழித்தால், எல்லாக் குழந்தைகளுக்கும் நல்ல இலவசக் கல்வியையும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல, இலவச சிகிச்சையையும் வழங்க முடியும். அப்போதுதான் நாடு முன்னேறும்” என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

திங்களன்று, பணவீக்க காலத்தில், குடிமக்கள் ஓரளவு நிவாரணம் பெறும் ஒரே மாநிலம் டெல்லி என்று கூறினார். “இன்று, பணவீக்கத்திலிருந்து குடிமக்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்க அயராது உழைக்கும் ஒரே மாநிலம் டெல்லி, மக்களும் இதை ஒப்புக்கொள்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

பெண்களுக்கான பொதுப் பேருந்துகளில் இலவசப் பயணம் தவிர, தரமான கல்வி, சிறந்த சிகிச்சை, 24×7 மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை டெல்லி அரசு இலவசமாக வழங்கியுள்ளது என்று கெஜ்ரிவால் கூறினார். “இதையெல்லாம் சேர்த்தால், ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாதமும் 10-15,000 ரூபாய் சேமிக்கிறது,” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.