வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா ‘டிவி’ விவாதம் ஒன்றில் பேசுகையில், முஸ்லிம் மதம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பா.ஜ., தலைமை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. பல்வேறு நாடுகளும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன. நூபுர் ஷர்மா மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன
இந்நிலையில், தன்னை கைது செய்ய தடை விதிக்கவும், பல்வேறு மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் நூபுர் ஷர்மா வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூபுர் சர்மா உயிருக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறினார்.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நூபுர் சர்மா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மாநிலங்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement