ரூ.270 கோடி சொத்து..! பொய்யான உயில்.. சிவாஜி மகள்கள் பரபரப்பு வாதம்


நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் பொய்யானது என அவரது மகள்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தங்கள் சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமாருக்கு எதிராகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

ரூ.270 கோடி சொத்து..! பொய்யான உயில்.. சிவாஜி மகள்கள் பரபரப்பு வாதம் | Actor Shivaji Daughters Argues In Court Brothers

இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கணேசனின் மகள்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:- அனைத்து சொத்துகளிலும் சமபங்கு உள்ளதாக ராம்குமார் முதலில் கூறியுள்ளார். அவ்வாறு கூறி சகோதரிகளிடம், சகோதரர் பிரபுவிடமும் கடந்த 2013-ம் ஆண்டு பொது அதிகார பத்திரத்தை எழுதி வாங்கிக்கொண்டார். 1999-ம் ஆண்டு எழுதப்பட்ட பதிவு செய்யப்படாத நடிகர் சிவாஜியின் உயில் 2021-ம் ஆண்டுதான் வெளிவந்தது.

அந்த உயிலில் மனுதாரர்கள் இருவருக்கும் சொத்தில் உரிமையில்லை என கூறப்பட்டுள்ளது. உயிலின் உண்மைத்தன்மை குறித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

ரூ.270 கோடி சொத்து..! பொய்யான உயில்.. சிவாஜி மகள்கள் பரபரப்பு வாதம் | Actor Shivaji Daughters Argues In Court Brothers

நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் இந்த உயில் ஜோடிக்கப்பட்டது. உயில் சட்டப்படி உண்மையானது என்று சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல. மேலும், சொத்தில் பாகப்பிரிவினை செய்யக்கோரி கடந்த 2021-ம் ஆண்டு ராம்குமாருக்கு மனுதாரர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அந்த நோட்டீசுக்கு அளித்த பதிலில்தான், 1999-ம் ஆண்டு சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளதாக முதல்முறையாக காண்பித்துள்ளார்.  சாந்தி தியேட்டரில் இருந்த சிவாஜியின் 50 பங்குகளும், தாயார் கமலாவின் 650 பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என கூறினார்.

இவரது வாதம் முடிவடையாததால் விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

ரூ.270 கோடி சொத்து..! பொய்யான உயில்.. சிவாஜி மகள்கள் பரபரப்பு வாதம் | Actor Shivaji Daughters Argues In Court Brothers



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.