சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சட்டென்று சரிந்த வேன்!

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள மோரிஸ் பூங்கா பகுதியில், சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று, சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கவிழ்ந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அங்கிருந்த மற்றோரு காரின் பின்பக்க சக்கரங்களும் பள்ளத்திற்குள் சென்று கவிழும் தருவாயில் நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தொடர் கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஒரு நாளைக்கு பிறகு இந்த பள்ளம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நியூ யார்க் நகர சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.