கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்துண்டி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதனால் முன் அறிவித்தல் இன்றி நீர் விநியோக துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பூநகரி நீர் வழங்கல் திட்டமானது கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அதிக தொலைவில் இருப்பதன் காரணமாக அங்கு தேவையான நீரை விநியோகிப்பதில் ஏற்படுகின்ற
சிரமங்கள் காரணமாக தினமும் காலை 5 .00 – 8.00 மணி வரையும் நீர் விநியோகம் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் சபை தெரிவித்துள்ளது.
பொது மக்கள் நீரை சிக்கனமாகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துமாறு சபை அறிவித்துள்ளது.
மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் போது குடிநீர் விநியோகமும் வழமைக்குத் திரும்பும் எனவும் நீர் வழங்கல்வடிகாலமைப்பு சபை
அறிவித்துள்ளது.