போபால் : மத்திய பிரதேசத்திலிருந்து, மஹாராஷ்டிராவுக்கு சென்ற பஸ் நர்மதை ஆற்றில் நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நான்கு பெண்கள், ஒரு குழந்தை உட்பட 1௩ பேர் உயிரிழந்தனர். ம.பி.,யில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தார் மாவட்டத்திலிருந்து, மஹா.,வுக்கு சென்ற பஸ் நர்மதை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து, ம.பி., உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், ”மஹா., போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான இந்த பஸ், 32 பயணியருடன் நேற்று காலை இந்துாரிலிருந்து புறப்பட்டது. ”ஹால்கட் அருகே பஸ் சென்ற போது பாலத்திலிருந்த தடுப்பு சுவரை உடைத்து நர்மதை ஆற்றில் கவிழ்ந்தது. இதில், 1௩ பேர் உயிரிழந்தனர்; 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர்,” என்றார்.தகவல் அறிந்ததும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆற்றில் நீரோட்டம் வலுவாக உள்ளதால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மஹா., முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, தலா ௧௦ லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க போக்கு வரத்து கழகத்துக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, பிரத மரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ௫௦ ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும், என, பிரதமர் மோடி, தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் அறிவித்துஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement