சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் ரெசசன் அச்சம் இருந்து வருகின்றது. இதனால் ஐடி துறையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
குறிப்பாக ஐடி துறையில் தேவையின் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐடி துறையின் வளர்ச்சி பாதிக்கப்படலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
இதனால் ஐடி துறையில் பணியமர்த்தலிலும் தாக்கம் இருக்கலாம் என்ற பதற்றமும் இருந்து வருகின்றது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
80-ஐ தொட்ட ரூபாய்.. சாமானிய, நடுத்தர மக்களுக்கு என்ன பாதிப்பு..!
சர்பிரைஸ் கொடுக்கும் அறிவிப்பு
ஆனால் இந்த காலகட்டத்தில் டாடா எல்க்ஸி கொடுத்துள்ள ஒரு அறிவிப்பு, ஊழியர்கள் மத்தியில் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வந்துள்ளது.
டாடா எல்க்ஸி தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 2023ம் நிதியாண்டில் 50% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா எல்க்ஸி அதன் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த பட்ஜெட் குறைப்பினையும் பார்க்கவில்லை என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் ராகவன் தெரிவித்துள்ளார்.
50% பணியமர்த்தல் அதிகரிக்க திட்டம்
பெங்களூரினை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் தற்போது 10,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இதில் சுமார் 50% மார்ச் 2023க்குள் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதில் புதிய பட்டாதாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களும் அடங்குவர் என அறிவித்துள்ளது.
டாடா எல்க்ஸி-யின் திட்டம்
மேற்கண்ட பணியமர்த்தலில் பிரெஷ்ஷர்கள் 3000 – 3500 பேரையும், 1000 – 1500 லேட்டரல் பணியமர்த்தலையும் 2023ம் நிதியாண்டில் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச நிறுவனங்களாக கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வளர்ச்சி விகிதம் சுருங்கி வருவதாக கூறி, வளர்ச்சியினை தக்கவைத்துக் கொள்ள பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளன. ஆனால் இந்திய நிறுவனம் பணியமர்த்தலை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது ஆச்சரியமளிக்கும் விதமாக உள்ளது.
டாடா எல்க்ஸி
டாடா எல்க்ஸி பங்கு விலையானது இந்த ஆண்டு 38% ஏற்றம் கண்டுள்ளது. இது சரிவினைக் சந்தித்த ஐடி குறியீட்டினை மீட்க முக்கிய காரணமாக அமைந்தது.
உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மின்சார வாகனங்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் முக்கிய வடிவமைப்பு சேவைகளுக்கான வலுவான தேவை உள்ளது. இது டாடா எல்க்ஸியின் பங்கு விலை மூன்றில் ஒரு பங்கு அதிகரிக்க உதவியது.
வலுவான ஆர்டர்கள்
சர்வதேச அளவில் பணவீக்க கவலைகள் இருந்தாலும், டாடா குழுமத்தினை சேர்ந்த இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் ராகவன், உலக பொருளாதாரம் சற்று மந்த நிலையில் இருந்தாலும், டாடா எல்க்ஸின் ஆர்டர்கள் வலுவாக காணப்படுகின்றது. இதுவே வளர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
நிகர லாபம்
ஜுன் காலாண்டில் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது 726 கோடி ரூபாய் என நிறுவனம் அறிவித்துள்ளது. இது கடந்த காலாண்டினை காட்டிலும் 6.5% அதிகரித்தும், இதே கடந்த காலாண்டினை காட்டிலு 30% அதிகரித்தும் காணப்படுகின்றது. இதே நிகரலாபமானது, 184.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 15.2% அதிகரித்தும், கடந்த ஆண்டினை காட்டலும் 62.9% அதிகரித்துள்ளது.
what hiring slowdown? This Tata firm to increase headcount by 50% in a year
what hiring slowdown? This Tata firm to increase headcount by 50% in a year/டாடா குழும நிறுவனம் எடுத்த திடீர் முடிவு.. ஊழியர்கள் கொண்டாட்டம்..!