கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக தற்போது சர்ச் இன்ஜின் சேவையை டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் உருவாக்கியிருக்கும் வேளையில், சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் சந்தையில் புதிதாக வரும் பொருட்கள், கருவிகளுக்கான டிஜிட்டல் சேவைகளை உருவாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
இதன் முதல் படியாக உலகளவில் அதிகரித்து வரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கானப் பிரத்தியேக சேவையை தனது கூகுள் மேப்ஸ் தளத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் தனது முக்கிய சேவை பிரிவான கூகுள் மேப்ஸ்-ல் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான பிரத்தியேகமாக வழிகாட்டும் அம்சத்தை உருவாக்கி வருகிறது. எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்கள் நீண்ட தூரம் பயணிக்கும் வகையில், அதேவேளையில் சார்ஜிங் ஸ்டேஷன் கொண்ட வழித்தடத்தைக் காட்ட இப்பிரிவு வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை அளிக்க உள்ளது.
கூகுள் மேப்ஸ்
கூகுள் மேப்ஸ்-ன் சமீபத்திய பீட்டா அப்டேட் – வெர்சன் 11.39 – அறிக்கைகளின்படி, காஸ், டீசல் மற்றும் எலக்ட்ரிக் உள்ளிட்ட பிற விருப்பங்களுடன் வாகனங்களுக்கான வழித்தடத்தைத் தேர்வு செய்யும் வசதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆற்றல் மற்றும் எரிபொருளைச் சேமிக்கும் சிறந்த வழித்தடத்தை வழங்கத் தரவு பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
கூகுள் மேப்ஸ் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிற பிரச்சனைகளுக்கு ஏற்ப மாற்று வழித்தடத்தைக் கொடுத்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறியும் திறனை கொண்டு வந்தது.
டோல் கட்டணம்
இந்தியாவில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது மேப்ஸ் செயலியில் புதிதாக ஒரு சேவையை அறிமுகம் செய்துள்ளது, இப்புதிய சேவையில் வெளி மாநிலங்கள் அல்லது வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் போது இருக்கும் டோல்களில் செலுத்த வேண்டிய கட்டணத்தை முன்கூட்டியே கணக்கிட்டு மக்களுக்கு அளிக்கும் சேவையைக் கொண்டு வந்துள்ளது.
இந்தியா
கூகுள் நிறுவனம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருக்கும் 2000க்கும் அதிகமான டோல்களின் கட்டண தரவுகளை சேகரித்து இச்சேவையை அளிக்கிறது. விரைவில் உலகின் பிற நாடுகளிலும் அளிக்க உள்ளதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் பெயரில் போலி நிறுவனம்.. அதிர்ந்துபோன மத்திய அரசு..! #PLI
Google Maps plans to new feature for Electric and hybrid cars to save energy and locate charging station
Google Maps plans to new feature for Electric and hybrid cars to save energy and locate charging stations எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கூகுள்-ன் புதிய சேவை.. இனி ஜாலி தான்..!