கடும் வெப்பம் காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கூடுதல் இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
2000-2019 க்கு இடையில் சராசரியாக ஒவ்வொரு கோடையிலும் வெப்பம் தொடர்பான காரணங்களால் இறந்தவர்களை விட, இந்த வாரம் அதிக மக்கள் வெப்பத்தால் இறப்பது அதிகரிக்கும் என பத்திரிகையாளர் கீரன் டிவைன் தெரிவிக்கிறார்.
இந்த மாதிரியானது ஜூலை 17 முதல் 22 வரையிலான வானிலை முன்னறிவிப்புகளை எடுத்து, முந்தைய வெப்ப அலைகளில் பதிவு செய்யப்பட்ட அதிகப்படியான இறப்புகளுடன் பொருந்தியது.
85 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே பாதிக்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படும் என்றும், மிட்லாண்ட்ஸ் மற்றும் லண்டன் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
இங்கிலாந்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது
இதேவேளை, இங்கிலாந்தில் முதன்முறையாக 40C (104F)க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
லிங்கன்ஷையரில் உள்ள கோனிங்ஸ்பையில் 40.3C (104.5F) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது ஜூலை 2019 இல் அமைக்கப்பட்ட முந்தைய அதிகபட்சமான 38.7C வெப்பநிலையை தாண்டிய 34 இடங்களில் ஒன்றாகும்.
இங்கிலாந்தின் சில பகுதிகளில் புல்வெளிகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின்சாரம் தடைபட்டது, தண்டவாளங்களில் அதிக வெப்பம் காரணமாக வளைவுகள் ஏற்பட்டதால் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் லண்டன் முழுவதும் தீயை சமாளித்து வருகின்றனர், அதே நேரத்தில் லண்டன் யூஸ்டன் மற்றும் மில்டன் கெய்ன்ஸ் இடையே அனைத்து ரயில்களும் இடைநிறுத்தப்பட்டன.
கிழக்கு லண்டனின் புறநகரில் உள்ள வெனிங்டன் கிராமத்தில் உள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மில்டன் கெய்ன்ஸில் ஒரு பாலர்பாடசாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தலைநகரில் உள்ள மக்கள் இன்று மாலை barbecues அல்லது நெருப்பு வைக்க வேண்டாம் என்றும் சிகரெட்டை அப்புறப்படுத்தும்போது கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.