12ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலை.. HCL நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கே அவர்களுக்கு ஏற்ற தகுதியான வேலை கிடைப்பது அரிதான நிலையில் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை தருவதாக HCL நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிறுவனம் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களை வேலைக்கு எடுத்து, பயிற்சி கொடுத்து அதன் பின் தங்கள் நிறுவனத்திலேயே நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை தருவதாக அறிவித்துள்ளது.

மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!

TechBee என்ற திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக கேரளாவில் 12ஆம் வகுப்பு படித்த 750 மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைக்கு சேர நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

750 மாணவர்கள்

750 மாணவர்கள்

ஆரம்பகால தொழில் திட்டமான TechBee என்ற திட்டத்தின்படி HCL நிறுவனம் கேரளாவில் இருந்து 750 புதியவர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது.
கேரளாவில் உள்ள ஐந்து நகரங்களில் இதற்கான நேர்காணல் நடைபெறவுள்ளது.

HCL டெக்னாலஜிஸ்

HCL டெக்னாலஜிஸ்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிதி சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. HCL டெக்னாலஜிஸ் தொடர்ந்து விரிவடைந்து வளர்ந்து வரும் நிலையில் கேரளாவில் இருந்து 750 க்கும் மேற்பட்ட புதிய திறமையாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TechBee திட்டம்
 

TechBee திட்டம்

HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆரம்பகால தொழில் திட்டமான TechBee என்பது அரசாங்கத்தின் “திறன் இந்தியா” பணிக்கு பங்களிக்கும் ஒருங்கிணைந்த உயர்கல்வி திட்டமாகும். HCL நிறுவனத்தின் புதிய இந்த திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 10+2 மாணவர்களை எதிர்காலத்தில் தயார்படுத்தும் திறன்களை கொண்டு ஐடி இன்ஜினியரிங் வேலைகளை வழங்க இந்தத் திட்டம் உதவுகிறது.

கேரள மாணவர்கள்

கேரள மாணவர்கள்

HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுப்பராமன் இதுகுறித்து கூறியபோது, ‘சிறந்த திறமையாளர்களை பணியமர்த்தவும், அவர்களின் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே நிதி சுதந்திரத்தை அடையவும் 2017ஆம் ஆண்டு TechBee திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை, 7,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் TechBee திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, HCL நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் உள்ளனர். கேரளா மற்றும் பிற அண்டை மாநிலங்களில் உள்ள மாணவர்களின் ஆர்வத்தையும் திறனையும் நாங்கள் கவனித்து இந்த நேர்காணலை நடத்துகிறோம்’ என்று கூறியுள்ளார்.

ஐடி வேலைக்கு தயார்படுத்துதல்

ஐடி வேலைக்கு தயார்படுத்துதல்

இந்தத் திட்டம் மாணவர்களை தொழில்நுட்ப ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் HCL நிறுவனத்தில் நுழைந்து அதன்பின் அவர்களை ஐடி வேலைகளுக்கு தயார்படுத்துகிறது. 12 மாத பயிற்சிக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு HCL திட்டங்களின்படி இன்டர்ன்ஷிப் செய்ய மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பணிபுரியும் போது, ​​மாணவர்கள் பிட்ஸ் பிலானி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் அமிட்டி பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் இளங்கலை பட்டப்படிப்பு திட்டத்திலும் சேரலாம்.

 ரூ.10,000 உதவித்தொகை

ரூ.10,000 உதவித்தொகை

ஒரு வருட பயிற்சி முடிந்த பிறகு, மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1.70 முதல் 2.20 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் வகுப்பறை பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப்பை முடித்தவுடன் HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஒரு உறுதியான வேலையைப் பெறுவார்கள். மேலும் அவர்களுக்கு இன்டர்ன்ஷிப் காலத்தில் ரூ.10,000 உதவித்தொகையுடன் வருகிறது.

தேர்வு முறை

தேர்வு முறை

2021 ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பை முடித்த அல்லது தற்போது 12ஆம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்கள் கணிதம் அல்லது வணிக கணிதத்துடன் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் 12ஆம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

 தேர்வு எப்படி?

தேர்வு எப்படி?

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கேரியர் ஆப்டிட்யூட் தேர்வுக்கு (HCL CAT) வரவழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதில் தகுதி பெற்றால் HCL லெட்டர் ஆஃப் இன்டென்ட்/ஆஃபர் கடிதத்தை வழங்கும்.

கட்டணம் எவ்வளவு?

கட்டணம் எவ்வளவு?

இந்த பயிற்சி திட்டத்திற்கான கட்டணம் ரூ.1,00,000 மற்றும் வரி என்றும் எளிய தவணை முறையிலும் கட்டணங்கள் செலுத்தி கொள்ளலாம் என்றும், இதற்கான நிதி நிறுவனங்களின் வழிகாட்டுதலும் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

HCL Technologies conducts walk-in drive in Kerala for Class 12 students

HCL Technologies conducts walk-in drive in Kerala for Class 12 students | 12ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலை.. HCL நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!

Story first published: Tuesday, July 19, 2022, 13:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.