இன்னும் சில தினங்களில் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படும் திரவுபதி முர்மு, ஆடம்பரம் இல்லாத மிக எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறார்.
ஆதரவு
நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆதரவு இருப்பதால், அவரது வெற்றி ஏற்கனவே உறுதியானதாக கருதப்படுகிறது.
நாளை ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்னும் சில தினங்களில் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் குடியேறப்போகும் திரவுபதி முர்மு, மிகவும் எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறார்.
தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழும் பழக்கம் உடைய அவர், முதலில் ராஜயோகா செய்கிறார்.
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு இழப்புகளில் இருந்து மீள்வதற்காக, பிரம்ம குமாரிகள் அமைப்பில், திரவுபதி முர்மு தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.யோகா செய்த பின் தியானத்தில் ஈடுபடும் முர்மு, அதன்பின் சிவன் வழிபாட்டில் ஈடுபடுகிறார். அதன் பின்னரே தன் தினசரி அலுவல்களை துவக்குகிறார். டில்லியில், எண் 4, உமா சங்கர் தீக் ஷித் மார்கில் உள்ள
வீட்டில் திரவுபதி முர்மு தற்போது தங்கி உள்ளார்.
வேடிக்கை
தேர்தல் வெற்றியை கொண்டாட அப்பகுதி தயாராகி வருகிறது. வீட்டின் முன் பெரிய பந்தல் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. எவ்வித பதற்றமும் இன்றி திரவுபதி முர்மு அனைத்தையும் அமைதியாக
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.- நமது சிறப்பு நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement