அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கலாமா? -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரசு ஆசிரியரின் இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய தனுஷ் கோடி என்பவர், முதல் மனைவி உயிருடன் இருந்தபோது, முதல் மனைவியின் சகோதரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 1997-ல் ஓய்வு பெற்ற தனுஷ் கோடி, 2010-இல் மரணமடைந்தார். இதையடுத்து தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரி ஆசிரியரின் இரண்டாவது மனைவி சாந்தி அரசுக்கு விண்ணப்பித்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சாந்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது அரசு ஊழியர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்வது தவறான நடத்தை எனவும், இரண்டாவது திருமணம் செல்லத்தக்கதல்ல எனவும் அதனால் ஓய்வூதியம் கோர மனுதாரருக்கு உரிமையில்லை என அரசுத் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, அரசின் உத்தரவில் எந்த சட்ட விரோதமும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: மாணவிக்கு சாக்லெட் கொடுத்த மாணவன்: நிர்வாகத்தினர் கண்டித்ததால் தற்கொலை முயற்சிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.