குருகிராம்: ஹரியானாவில் சட்டவிரோதமாக கனிம கொள்ளையில் ஈடுபட்டதை தடுத்த போலீஸ் டி.எஸ்.பி. லாரி ஏற்றி கொல்லப்பட்டார்.ஹரியானா நுஹ் மாவட்டத்தில் ஒரு சில கும்பல் கனிம கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது மலையை உடைத்து பாறைகளை கடத்தி வருகின்றனர்.
இது பற்றி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மலையை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீஸ் டி.எஸ்.பி. சுரேந்திர சிங் ஜீப்பில் சென்றார். அங்கு ஒரு லாரி பாறாங்கற்களை ஏற்றிக் கொண்டு எதிரில் வந்தது.அதை நிறுத்தச் சொல்லி சுரேந்திர சிங் சைகை காட்டினார். ஆனால் அந்த லாரி படுவேகமாக வந்து ஜீப் மீது மோதியது.
இதில் ஜீப்பில் இருந்த சுரேந்திர சிங் துாக்கி வீசப்பட்டார். அவரது பாதுகாவலரும் ஜீப் டிரைவரும் கீழே குதித்து தப்பினர்.சுரேந்திர சிங்கை அருகிலுள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.
கடந்த 1994ல் உதவி இன்ஸ்பெக்டராக போலீசில் சேர்ந்த சுரேந்திர சிங் இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement