ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க முதலமைச்சர் சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மெய்யநாதன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பிரதமரிடம் அழைப்பிதழை வழங்கினர்.

187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ள ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்குகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.