ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யக் கோரி இலங்கை விநிவித பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை இன்றி உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எதிர்தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனைகளை ஏற்று இந்த அடிப்படை உரிமை மனுவை நிராகரிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திருமதி கனிஷ்கா டி சில்வா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவரை பாரளுமன்ற உறுப்பினராக தேசிய பட்டியலில் நியமிக்க முடியாது. இருந்த போதிலும்இ ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்ததன் மூலம்இ அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகஇ விநிவித பெரமுனவின் பொதுச் செயலாளர் நாகானந்த கொடித்துவக்குவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு (18) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திருமதி கனிஷ்க டி சில்வா, இந்த மனுவை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை என்று தெரிவித்தார்.