கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட பள்ளி மீட்பு நடவடிக்கை.. புதிய அதிகாரி நியமனம்.!!

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி பள்ளி விடுதியில் தங்கி இருந்து பன்னிரண்டாம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. 

ஆனால் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவி தாயார் புகார் தெரிவித்து இருந்தார். இதனால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். 

அதன்பிறகு மக்கள், மாணவ அமைப்பு என பல்வேறு தரப்பினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதால், போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்திற்குள் இருந்து பேருந்துகளை தீ வைத்து எரித்தும், போலீஸ் வாகனத்தை தீ விபத்து எரித்தும் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்ததால் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.