பாராளுமன்றத்தில் மாற்றீட்டு ஜனாதிபதி (அடுத்துவரும் ஜனாதிபதி)க்கான தேர்தல் இன்று (20) நடைறுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தமது பதவிகாலம் முடிவடைவதற்கு முன்னர் பதவியை ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்ககாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பு இன்று முற்பகல் பத்து மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் மாற்றீட்டு ஜனாதிபதி (அடுத்துவரும் ஜனாதிபதி) பதவிக்காக போட்டியிடுகின்றார்கள்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்றைய வாக்கெடுப்பின் போது தெரிவத்தாட்சி அதிகாரியாக பணியாற்றவுள்ளார்.
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் தாம் இந்தப் பதவியை வகிக்க தயார் என்பதை எழுத்து மூலம் அறிவிப்பது அவசியமாகும்.
இதன் பிரதியை தமக்கு கையளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் கூறினார்.
நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட ரணில் விக்கிரமசிங்க ஆறு தடவைகள் நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அவருடைய பெயரை இந்த வாக்கெடுப்பிற்காக முன்மொழிந்திருந்தது.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க பல்வேறு கட்சிகள் தீர்மானித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் போட்டியிடும் டலஸ் அழகப்பெரும நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவராவார். மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுரகுமார திசாநாயக்க இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன
இதேவேளை ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள வாக்கெடுப்பு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் சகல தரப்புக்களையும் அவர் கேட்டுள்ளார்.
சட்ட பூர்வமான முறையின் கீழ் இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
ஜனநாயக அடிப்படையில் இந்தத் தேர்தலை நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மாற்றீட்டு ஜனாதிபதி (அடுத்துவரும் ஜனாதிபதி) தொடர்பாக அரசியல் யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் பின்வருமாறு:
அடுத்துவரும் ஜனாதிபதி
உள்ளடக்கம்
I. கண்ணோட்டம்
II. ஜனாதிபதி பதவி வறிதாதல்
III. பாராளுமன்றம் மூலமான ஜனாதிபதி
IV. பாராளுமன்றம் மூலமான ஜனாதிபதிக்கான நடைமுறை
(அ) பாராளுமன்றம் மூலமான ஜனாதிபதி தொடர்பான விடயங்கள்
(ஆ) பாராளுமன்றத்தைக் கூட்டுதல்
(இ) நியமிக்கப்பட்ட கால அளவு
(ஈ) வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளல்
(உ) தேர்தல் நடத்தப்படும் முறை
i) செயலாளர் நாயகத்தின் வகிபாகம்
ii) பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம்
iii) வாக்களிக்கும் முறை
iv) வாக்குச் சீட்டின் மாதிரி வடிவம்
v) வாக்குச் சீட்டு செல்லுபடியற்றதாகும் சந்தர்ப்பங்கள்
V. ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் பாராளுமன்றத்தின் மூலமான ஜனாதிபதியின் பதவிக்காலம் வெற்றிடமாகும் இடைப்பட்ட காலம்
- கண்ணோட்டம்;
இந்தக் குறிப்பில், “அடுத்துவரும் ஜனாதிபதி” என்ற பதம் தற்போதைய ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் வெற்றிடமாகி புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வைக் குறிக்கிறது. அவ்வாறான சூழ்நிலையைக் கையாழும் அரசியலமைப்பின் விதிகள் (சரத்துக்கள்) மற்றும் 1981ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் ஆகியவற்றுடன் பொருந்தக்கூடிய விடயங்களை இந்தக் குறிப்பு ஆராயும். இவ்வாறான சூழ்நிலையின் போது நிலையியற் கட்டளைகளின் ஊடாக முன்னெடுக்கப்படக் கூடிய பாராளுமன்ற நடைமுறைகள் குறித்தும் இது ஆராயும்.
- ஜனாதிபதி பதவி வறிதாதல்
ஜனாதிபதித் தேர்தல் மூலம் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன்[1] (இது மக்கள் ஒரு வாக்கெடுப்பில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை), அத்தகைய நபர் ஐந்தாண்டு[2] காலத்திற்குப் பதவியில் இருப்பார் என்பதுடன், மேலும் அத்தகைய காலம் முடிவடைந்ததும் அவர் தானாகவே செயற்படுவதை நிறுத்துவார். ஜனாதிபதியைத் தேர்வுசெய்யும் அவ்வாறான மக்கள் தேர்தல் ஐந்து வருடங்கள;[3] முடிவடைந்த பின்னர் அதற்கு முன்னர் அன்றியே[4] நடத்தப்பட வேண்டும். ஐந்து வருட பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி தனது பதவியிலிருந்து வெளியேறினால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழலாம். உதாரணமாக மக்களால் தெரிவுசெய்யப்பட முடியாது. அவ்வாறான விடயத்தை ஆராய்வதற்கு முன்னர் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவரின் பதவி முன்கூட்டியே வெற்றிடமாவதற்கான சந்தர்ப்பங்களை ஆராய்வது பொருத்தமானதாகும். இது 38வது சரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், அவ்வாறான சந்தர்ப்பங்கள் வருமாறு:
- ஜனாதிபதித் தேர்தல் செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் அறிவித்தால;[5]
- ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர், தெரிவுசெய்யப்பட்ட திகதியிலிருந்து இரண்டு கிழமைகளில் பதவியேற்கத் தவறினால;[6]
- பதவியிலிருக்கும் ஜனாதிபதி உயிரிழந்தால;[7]
- இலங்கையின் ஒரு பிரஜையாக இல்லாதொழிந்தால;[8]
- பதவியிலிருக்கும் ஜனாதிபதி இராஜினாமாச் செய்தால;[9]
- பதவியிலிருக்கும் ஜனாதிபதி பாராளுமன்றத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டால் [10]
மேல் குறிப்பிடப்பட்ட எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது ஜனாதிபதியின் பதவி ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னர் வெற்றிடமானால், அப்படியானால் மக்களால் தேர்தல் நடத்தப்படாமல் அடுத்துவரும் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவார்.
- பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி
ஐந்து வருட காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியின் பதவி வெற்றிடமானால் பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி என்ற விடயத்தை 40 (1) (அ) சரத்து இவ்வாறு குறிப்பிடுகிறது, “ஜனாதிபதி என்ற பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்குத் தகைமையுடையவராயுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்”[11]. இந்த நோக்கத்துக்காக இக்குறிப்பில் ‘பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி’ என்ற பதம் பயன்படுத்தப்படுவதுடன், அவ்வாறு தெரிவு செய்யப்படும் நபர் “அடுத்தவரும் ஜனாதிபதி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்துவரும் ஜனாதிபதி தனக்கு முன்னர் இருந்தவரின் எஞ்சிய பதவிக்காலத்துக்கு ஜனாதிபதிப் பதவியை வகிப்பார்.
எனினும், ஜனாதிபதித் தேர்தல் செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் அறிவித்தால் ‘பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி’க்கான நடைமுறைகள் ஏற்புடையவையாக இருக்காது[12]. அத்தகைய விதிவிலக்குக்கான தெளிவான காரணத்தை சட்டம் வழங்கவில்லை என்றாலும்,[13] ஒரு ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவதற்குள் அவருடைய பதவி வெற்றிடமாகும் 6 நிகழ்வுகளில் (38வது சரத்துக்கு மேலே) 5 நிகழ்வுகளில் மட்டுமே பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி நடைமுறைக்கான தூண்டுதலுக்கு வழிவகுக்கப்படுகின்றன.
- பாராளுமன்றம் மூலமான ஜனாதிபதிக்கான நடைமுறை
அ. பாராளுமன்றம் மூலமான ஜனாதிபதி தொடர்பான விடயங்கள்
பாராளுமன்றம் மூலமான ஜனாதிபதி தொடர்பான அனைத்து செயற்பாடுகளுக்கும் வழங்கக்கூடிய சட்டவாக்க அதிகாரத்தை அரசியலமைப்பு அங்கீகரித்துள்ளது[14]. இவ்வாறான சந்தர்ப்பத்தில் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் ஏற்புடையதாகும் என்பதை நிலையியற் கட்டளை இலக்கம் 07[15] குறிப்பிடுகிறது. தேர்தல் நாளில் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை வரையறுப்பதைத் தவிர, மேற்கூறிய சட்டமானது தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதற்கான வழிமுறை[16]> தண்டனை மற்றும் தகாத செல்வாக்கு, இலஞ்சம் ஆகியவற்றாலான இயலாமை[17] மற்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறை[18] ஆகியவற்றுக்கான பொறிமுறை என்பவற்றை இந்தச் சட்டம் வழங்குகிறது.
ஆ. பாராளுமன்றத்தைக் கூட்டுதல;
பாராளுமன்றத்தைக் கூட்டுவது என்பது ‘பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி’ என்ற முயற்சிக்கு முன்நிபந்தனையாக அமைகிறது. 70வது சரத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாகியுள்ள சூழ்நிலையில் பாராளுமன்றத்தை எவ்வாறு கூட்டுவது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தில் இதற்கான பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்படாத சூழ்நிலையில் ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்படும்போது, அவ்வாறு எற்படும் வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும;[19].
இ. நியமிக்கப்பட்ட கால அளவு
அரசியலமைப்பு, அத்தகைய செயல்முறையை முடிக்க வேண்டிய அவசரத்தை பிரதிபலிக்கும் வகையில், ‘பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி’ தொடங்கப்படும் காலக்கெடுவை வெளிப்படையாக வரையறுக்கிறது. ‘பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதிக்கான தேவை ஏற்படும் போது, அத்தகைய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு குறிப்பிடுகிறது. ‘பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதிக்கான தேவை ஏற்படும் போது, தற்போதைய ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பு குறிப்பிடுகிறது[20]. அடுத்துவரும் ஜனாதிபதியைக் கூடிய விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அரசியலமைப்பு முன்வைக்கிறது [21].
ஈ. வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளல;
- பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் செயலாளர் நாயகத்தை விளித்து அன்றையதினம் பாராளுமன்றத்துக்கு வருகைதந்துள்ள மற்றுமொரு உறுப்பினரின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியலாம;.[22]
- இந்த முன்மொழிவு மற்றுமொரு உறுப்பினரினால் வழிமொழியப்படும;.[23]
- ஜனாதிபதிப் பதவிக்கு ஒருவருடைய பெயர் மாத்திரம் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டிருந்தால், வேட்புமனுக் கிடைக்கப்பட்ட தினத்திலேயே அவர் அந்தப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது செயலாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படலாம;.[24]
- ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருந்தால் தேர்தல் நடத்துவதற்கான திகதி மற்றும் நேரத்தை பாராளுமன்றம் தீர்மானிக்கலாம். [25]
உ. தேர்தல் நடத்தப்படும் முறை
வாக்கெடுப்பானது, “பாராளுமன்ற சட்டத்தினால் ஏற்பாடு செய்யக்கூடியவாறான அத்தகைய நடவடிக்கை முறைக்கிணங்க இரகசிய வாக்கெடுப்பு மூலமும், அளிக்கப்பட்ட வாக்குகளின் பூரண பெரும்பான்மை மூலமும் நடைபெறுதல் வேண்டும்”[26] பூரண பெரும்பான்மை என்பது அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைப்பகுதியைவிட அதிகமாகும்.
எந்தவொரு வேட்பாளரும் பூரண பெரும்பான்மையைப் பெறாது அல்லது சம அளவிலான வாக்குகளைக் கொண்டிருந்தால் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 12 மற்றும் 13 முறையே பின்பற்றப்படும்.
- செயலாளர் நாயகத்தின் வகிபாகம;
- பாராளுமன்றம் கூட்டப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பது.[27]
- பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதிக்கான[28] வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்களைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தை [29] தீர்மானித்தல்.
- பாராளுமன்றத்தின் மூலமான ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட நாளில் ‘தெரிவத்தாட்சி அலுவலர்’ ஆகச் செயற்படுதல;.[30]
அ) வெற்று வாக்குச்சீட்டுப் பெட்டியை உறுப்பினர்களுக்குக் காண்பித்துப் பின்னர் அதனை முத்திரையிடல;.[31]
ஆ) வாக்களிப்புத் தொடங்கும்போது வாக்குச்சீட்டைப் பெறுவதற்காக சபாநாயகர் உட்பட ஒவ்வொரு உறுப்பினரினதும் பெயரை அழைத்தல;.[32]
இ) தெரிவத்தாட்சி அலவலர் உறுப்பினர்கள் முன்னிலையில் தமது முதல் எழுத்துக்களைக் கொண்டு வாக்குச்சீட்டின் பின்புறத்தில் முதலெழுத்தொப்பமிடல்.
ஈ) பெயர் கூப்பிடப்பட்டபோது வாக்களிக்காதிருந்த எவரேனும் உறுப்பினரின் பெயரை இரண்டாவது முறையாக அழைத்தல் வேண்டும். அவ்வாறு அழைக்கப்பட்ட பின்னரும் வாக்களிக்காதிருந்தால் அவர் வாக்களிக்காது ஒதுங்கியிருந்தவராகக் கருதப்படுவார;.[33]
உ) வாக்குச்சீட்டொன்று தற்செயலாகப் பழுதடைந்தால் இரண்டாவது வாக்குச் சீட்டை வழங்குதல;.[34]
ஊ) வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டமைக்கு அமைய வாக்குகளை எண்ணுதல;.[35]
எ) பூரண பெரும்பான்மை கொண்ட வேட்பாளரை அறிவித்தல;.[36]
ஏ) தெரிவுசெய்யப்பட்டதாக வெளிப்படுத்தப்படும் வேட்பாளரின் பெயரை வர்த்தமானியில் அறிவித்தல் (தேர்தல் நடைபெற்று 3 நாட்களுக்குள்).[37]
ஐ) ஒருவர் தெரிவுசெய்யப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்ட பின்னர் வாக்குச் சீட்டுக்கள் ஒரு பெட்டியினுள் இடப்பட்டு செயலாளர் நாயகத்தின் கட்டுப்பாட்டில் ஆறு மாதங்கள் வைக்கப்பட்டு, பாராளுமன்றத்திலிருந்து அவர் பெறக்கூடிய ஏதேனும் பணிப்புரைக்கு அமைய அந்த வாக்குச் சீட்டுக்கள் அழிக்கப்பட்டு, அவ்வாறு அழிக்கப்பட்டமை பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும்.[38]
- பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம;
- வாக்குச் சீட்டைப் பெற்றுக் கொண்டதும் ஏற்பாடு செய்யப்பட்ட கூண்டிற்குச் சென்று வாக்கைப் பதிவு செய்தல;.[39]
- வாக்குச் சீட்டில் தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர், வாக்குச் சீட்டை மடித்து தெரிவத்தாட்சி அலுவலரின் மேசையில் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள் இடுதல;.[40]
- வாக்களிக்கும் முறை
- உறுப்பினர் ஒருவர் தான் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்புகிறாரோ அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிரேயுள்ள சதுரத்தில் ‘1’ எனும் எண்ணை இடுதல் வேண்டும்.[41]
- பல வேட்பாளர்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும். இதற்கமைய போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய பெயர்களுக்கு எதிரேயுள்ள சதுரங்களில் 2,3, எனும் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும்.
- வாக்குச் சீட்டின் மாதிரி வடிவம;
வேட்பாளரின் பெயர் |
விருப்புவாக்கு |
வேட்பாளர் 1 |
|
வேட்பாளர் 2 |
|
வேட்பாளர் 3 |
|
வேட்பாளர் 4 |
- வாக்குச் சீட்டு செல்லுபடியற்றதாகும் சந்தர்ப்பங்கள் [42]
அ) உறுப்பினரை அடையாளம் கண்டுகொள்ளக் கூடியதாக அதன் மேல் ஏதாவது எழுதுதல் அல்லது குறியீடு செய்தல்; அல்லது,
(ஆ) தெரிவத்தாட்சி அலுவலரின் முதலெழுத்தொப்பங்களைக் கொண்டிராதிருத்தல்; அல்லது,
(இ) அதன்மீது 1 எனும் எண் குறியீடு செய்யப்படாதவிடத்து; அல்லது,
(ஈ) ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களின் பெயருக்கு எதிராக 1 எனும் எண் குறியீடு செய்யப்பட்டுள்ளவிடத்து; அல்லது,
(உ) குறியீடு செய்யப்படாதவிடத்து அல்லது எவருக்கு என அறிய முடியாத வகையில் குறியீடு செய்யப்பட்டிருந்தால்;
- ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் பாராளுமன்றத்தின் மூலமான ஜனாதிபதியின் பதவிக்காலம் வெற்றிடமாகும் இடைப்பட்ட காலம;
மேலே வெளிப்பட்டது போல, “பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி” தொடர்பான செயல்முறைகளைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் நியமிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் இதற்குக் கணிசமான நேரம் எடுக்கும். எனவே, அத்தகைய செயல்முறைகள் முடிவடையும் வரை, அரசியலமைப்பு இடைக்காலமாக செயல்படுவதற்கு “பதில் ஜனாதிபதி” என்ற வகிபாகத்தை வழங்கியுள்ளது. இதுபற்றி அரசியலமைப்பின் 40 (1) (இ) மற்றும் 40 (2) ஆகிய சரத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அத்தகைய இடைப்பட்ட காலத்திற்கு பிரதமர் “பதில் ஜனாதிபதியாக” இருப்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்காலிக பிரதமர் பதவிக்கு அவரால் நியமிக்கப்படுவார். “பதில் ஜனாதிபதி” பதவியை ஏற்றுக் கொள்ள பிரதமருக்கு முடியாதிருக்கும் சந்தர்ப்பத்தில் சபாநாயகர் இந்தப் பதவியை ஏற்றுக்கொள்வார். [43]
[1] 31 வது சரத்தை பார்க்கவும்
[2] 30(2) வது சரத்து
[3] 31(3) வது சரத்து
[4] 31(3A) வது சரத்தில் விளக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் தவிர்ந்த
[5] 38(1)(ஊ) வது சரத்து
[6] 38(1)(ஈ) வது சரத்து
[7] 38(1)(அ) வது சரத்து
[8] 38(1)(இ) வது சரத்து
[9] 38(1)(ஆ) வது சரத்து
[10] 38(1) வது சரத்து
[11] 1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க சட்டத்தின் பிரிவு 3ஆம் பிரிவையும் பார்க்கவும்
[12] ஐபிட்.
[13] உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்துக்கு ஏற்றவாறு அமைவதற்கு வாய்ப்பில்லை. மாறாக ஜனாதிபதித் தேர்தலின் ஆரம்பத்திலேயே இவ்வாறானதொரு அறிவிப்பு வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தால் ஜனாதிபதியைத் தூண்டுவதை தவிர்த்து புதிய வாக்கெடுப்பு நடத்தப்படும். அத்தகைய சந்தர்ப்பத்தில், 31(இ) சரத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.
[14] அரசியலமைப்பின் 40(1)(ஆ), 40(3) வது சரத்து
[15] பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்
[16] 1981 ஆம் ஆண்டில் 02 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 19, 22, 23, 24, 25 பிரிவுகள்
[17] ஐபிட் – 20 ஆம் பிரிவு
[18] ஐபிட் 14 -16 ஆம் பிரிவு
[19] ஐபிட் 3, 4 ஆம் பிரிவு
[20] அரசியலமைப்பின் 40(1)(ஆ) வது சரத்து
[21] ஐபிட்
[22] 1981 ஆம் ஆண்டில் 02 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 6(3) ஆம் பிரிவு
[23] ஐபிட்
[24] 1981 ஆம் ஆண்டில் 02 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 6(4) ஆம் பிரிவு
[25] ஐபிட்
[26] அரசியலமைப்பின் 40(1)(ஆ) வது சரத்து
[27] 1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க சட்டத்தின் 4 ஆம் பிரிவு
[28] 1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க சட்டத்தின் 5 ஆம் பிரிவு
[29] திகதி மற்றும் நேரம் பாராளுமன்றத்தை அழைத்து 48 மணித்தியாலங்களுக்கு குறையாததும் 7 நாட்களுக்கு கூடாததுமாக தீர்மானிக்கப்பட வேண்டும்
[30] ஐபிட் 7(1)1 ஆம் பிரிவு
[31] ஐபிட் 7(2) ஆம் பிரிவு
[32] ஐபிட் 7(3) ஆம் பிரிவு
[33] ஐபிட் 7(8) ஆம் பிரிவு
[34] ஐபிட் 7(7) ஆம் பிரிவு
[35] ஐபிட் 10, 12 மற்றும் 13 ஆம் பிரிவுகள்
[36] ஐபிட் 11 ஆம் பிரிவு
[37] ஐபிட் 17 ஆம் பிரிவு
[38] ஐபிட் 18 ஆம் பிரிவு
[39] ஐபிட் 7(4) ஆம் பிரிவு
[40] ஐபிட் 7(6) ஆம் பிரிவு, 8 ஆம் பிரிவையும் பார்க்கவும்
[41] ஐபிட் 8 ஆம் பிரிவு
[42] ஐபிட் 9 ஆம் பிரிவு
[43] அரசியலமைப்பின் 31(4)(ஆ) மற்றும் 31(4)(இ) ஆகிய சரத்துக்களிலும் முறைமையே எதிரொலிக்கப்படுகின்றது