கர்நாடாக அரசுப் பேருந்துகளில் திடீர் சோதனை – அபராத வசூல் எவ்வளவு தெரியுமா?

கர்நாடக அரசுப் பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த நபர்களிடம் இருந்து ரூ.5.7 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த ஜூன் மாதத்தில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் டிக்கெட் பரிசோதகர்கள் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்குச் சென்று கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்துகளில் திடீரென பரிசோதனையில் ஈடுபட்டனர்.
image
அப்போது மொத்தம் 46 ஆயிரத்து 813 பேருந்துகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 482 நடத்துநர்கள் டிக்கெட் கட்டண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் 3 ஆயிரத்து 937 பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
image
இதையடுத்து அவர்களுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 655 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மோசடி செய்த நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள், தவறாமல் டிக்கெட் கேட்டு பெற வேண்டும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. வேண்டுகோள் விடுத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.