மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 47வது ஜிஎஸ்ட் கவுன்சில் கூட்டத்தில் ப்ரீ பேக் செய்யப்பட்ட பிராண்டட் அரிசி, கோதுமை மாவு, மைதா, பருப்பு வகைகள் போன்ற மக்கள் தினமும் பயன்படுத்தும் மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி விதித்தது.
இது சாமானிய நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த வரி உயர்வுக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கேரளா அரசு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஜிஎஸ்டி-யில் இருந்து தப்பிக்க நிறுவனங்கள் புதிய முயற்சி..!
அத்தியாவசியப் பொருட்கள்
அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், கேரளாவில் குடும்பஸ்ரீ மற்றும் சிறு கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படாது என்று கேரள நிதியமைச்சர் கே என் பாலகோபால் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
குடும்பஸ்ரீ மற்றும் சிறு கடைகள்
குடும்பஸ்ரீ மற்றும் சிறு கடைகளில் தளர்வான பாக்கெட்டுகள் அதாவது 500 கிராம், 50 கிராம், 1 கிலோ, 2 கிலோ பாக்கெடுக்கள் மற்றும் லூசிஸ் விற்பனை செய்யப்பட்டும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.
கே என் பாலகோபால்
“குடும்பஸ்ரீ மற்றும் சிறிய கடைகளில் ஒன்று அல்லது இரண்டு கிலோ பாக்கெட்டுகளில் அல்லது தளர்வாக விற்கப்படும் பொருட்களுக்குக் கேரள மாநிலம் ஜிஎஸ்டியை விதிக்காது. இதனால் மத்திய அரசுடன் பிரச்சனை வந்தால் கூட வரி விதிக்கப்பட மாட்டாது” என்று கேரள நிதியமைச்சர் கே என் பாலகோபால் கூறியதாக ANI தெரிவித்துள்ளது.
பினராயி விஜயன்
இதுக்குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதாகவும், முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாகவும் கேரள நிதியமைச்சர் கே என் பாலகோபால் குறிப்பிட்டுள்ளார். சிறு வியாபாரிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
குடும்பஸ்ரீ
குடும்பஸ்ரீ என்பது கேரள அரசின் மாநில வறுமை ஒழிப்பு இயக்கத்தால் (SPEM) செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டமாகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய பெண்கள் சுய உதவி குழுவாகப் பார்க்கப்படுகிறது. இக்குழு சிறிய அளவிலான புட் பிராசசிங் அமைப்பு மற்றும் பல்வேறு கடைகளை நடத்தி வருகிறது.
5 சதவீதம் ஜிஎஸ்டி வரி
தானியங்கள், பருப்பு வகைகள், மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜயன் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார். இது போன்ற முடிவுகளை ஒவ்வொரு மாநிலமும் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன்
இதே வேளையில் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜூன் 28, 2022 அன்று சண்டிகரில் நடைபெற்ற 47வது கூட்டத்தில் வரி விகித மாற்றம் குறித்த விஷயத்தை அமைச்சர்கள் குழு முன்வைத்தபோது அனைத்து மாநிலங்களுக்கும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டன என ஜூலை 19 ஆம் தேதி டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
பாஜக அல்லாத மாநிலங்கள்
இதேபோல் பாஜக அல்லாத மாநிலங்கள் பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா உட்பட அனைத்து மாநிலங்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்ட பின்பு ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவு ஒருமித்த கருத்து என நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.
GST: No 5 percent GST on items sold by Kudumbashree, small stores says Kerala Finance Minister
GST: No 5 percent GST on items sold by Kudumbashree, small stores says Kerala Finance Minister மத்திய அரசின் 5% ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் கேரளா.. ஜிஎஸ்டி விதிக்க மாட்டோம் – பாலகோபால் அறிவிப்பு..!