கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியின் மர்ம மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவிக்கு ஆதரவாக நடிகை பிரியா பவானி சங்கரின் கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ந் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்டாலுமு் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாயிலாக பல்வேறு தரப்பினரும் மாணவிக்கு ஆதரவாக அவரது பெற்றோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கடந்த 17-ந் தேதி மாணவி படித்த தனியார் பள்ளியில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து சேர் மற்றும் பள்ளி பேருந்துகளை எரிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
மாணவிக்கு நீதி வேண்டும் என்று ஒருபுறம் அமைதியாக போராட்டம் நடைபெற்ற நிலையில், மறுபுறம் பள்ளிக்கு தீ வைத்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மாணவி மரணத்தில் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஜெஸ்டிஸ் ஸ்ரீமதி என்ற ஹேஷ்டேக் வைரலாக பரவி வரும் நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் யாரும், மரணமடைந்த மாணவி ஸ்ரீமதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திரைத்துறையினருக்கு எதிராக சமூக வலைதளங்களில் நெடடிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே நடிகை பிரியா பவானி சங்கர் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், தற்போது இந்த பிரச்சனையை தைரியமாக பேசிய ஒரே தமிழ் நடிகை என்று நெட்டிசன்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
பிபிஎஸ், அவரது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரியா பவானி சங்கர், அவ்வப்போது சமூக அக்கரையுடன் பல கருத்துக்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார். ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் மொழியிலும் புலமை பெற்றவர் பிரியா பவானி சங்கர்.
#justiceforsrimathi pic.twitter.com/QBuilRicDW
— Priya BhavaniShankar (@priya_Bshankar) July 18, 2022
நன்றி , இந்த சம்பவம் குறித்து முதல் கருத்து தெரிவித்த முதல் செலிப்ரேட்டி…உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துகள்…
— அன்பே சிவம் (@anbesivam744) July 18, 2022
நீங்களாவது பதிவு போட்டிங்களே!
மிக்க நன்றி 🙏🙏🙏🙏#JusticForSriMathi #ஸ்ரீமதிக்குநீதிவேண்டும் #justiceforsrimadhi— SK DHEVAN SARANRAJ (@SkDhevan1) July 18, 2022
மேயாத மான் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தனுஷூடன் ‘திருச்சிற்றம்பலம்’, ஜெயம்ரவியுடன் ‘அகிலன்’, எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘பொம்மை’, ராகவாலாரன்சுடன் ‘ருத்ரன்’, சிம்புவுடன் ‘பாத்து தலை’, மற்றும் அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
நன்றி 🙏 @priya_Bshankar . இதற்கு அமைதி காக்கும் அனைத்து தமிழ் நடிகர்களும் உயிரோடிருந்தும் பிணங்களே.!#justiceforsrimathi
— உயிரெழுத்து (@uyirezhudhu) July 18, 2022
சூப்பர் பவானி எல்லாத்துக்கும் இது மாதிரி குரல் கொடுக்க🤘🤘💪
— CUCKOO VINOTH.A (@CuckooVinoth) July 18, 2022
இதில் கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அருண் விஜயின் யானை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”