எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதினால் ,நேற்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 2.23%த்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரை நடைமுறையில் உள்ள குறைந்த கட்டணம் 40 ரூபா 38 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் கட்டண குறைப்பு தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கும் பொருந்தும்.
அத்துடன், பொதவான சேவைகள், அரை சொகுசு சேவைகள், சொகுசு சேவைகள் மற்றும் அதி சொகுசு சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் இந்த விலை திருத்தம் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தேசிய போக்குவரத்து சபை. வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படாவிட்டால் அது தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 1955 என்ற எமது தொலைபேசி இலக்கம் துரித 24 மணி நேரமும் சேவையில் இருக்கும். அதேபோல்,இந்த பஸ் கட்டணம் அறவிடப்படுவது குறித்து கண்காணிக்க, நடமாடும் பரிசோதகர்களை முடிந்தவரை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.