உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள்: முதலிடத்தில் ஜப்பான்; இந்தியாவுக்கு 87-வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் 87-வது இடத்தில் உள்ளது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது விசா ஆன் அரைவல் முறையில் சென்றுவர முடிகிறது என்பதின் அடிப்படையில் பாஸ்போர்ட்டின் சக்தி நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஜப்பான் பாஸ்போர்ட் மூலம் உலகம் முழுவதும் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாட்டு பாஸ்போர்ட்டுகள் மூலம் 192 நாடுகளுக்கு இவ்வாறாக செல்லலாம். ரஷ்ய பாஸ்போர்ட்டின் இடம் இந்தப் பட்டியலில் 50. ரஷ்ய பாஸ்போர்ட் மூலம் 119 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

ஆனால், ரஷ்ய படையெடுப்புக்கு உள்ளான உக்ரைன் இந்த தரவரிசையில் ரஷ்யாவை முந்தியுள்ளது. உக்ரைனிலிருந்து 144 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்.

சீனா 69-வது இடத்தில் உள்ளது. இந்தியா இந்தப் பட்டியலில் 87-வது இடத்தில் உள்ளது. தாலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து 27 நாடுகளுக்கு மட்டுமே தங்கு தடையின்றி செல்ல முடியும்.

இந்தப் பட்டியல் உலக நாடுகளின் தூதரக உறவின் வலிமையை வெளிப்படுத்துகிறது. ஒரு நாடு எத்தனை நாடுகளுடன் எளிமையான போக்குவரத்தைக் கொண்டுள்ளதோ அதன் அடிப்படையில் தரவரிசையில் முன்னேறுகிறது.

டாப் 10 நாடுகளின் பட்டியல்:

வரிசை எண் நாடுகள் விசா ஃப்ரீ ஆக்சஸ் நாடுகள் எத்தனை?
1. ஜப்பான் 193
2 சிங்கப்பூர், தென் கொரியா 192
3 ஜெர்மனி, ஸ்பெயின் 190
4

ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், பிரிட்டன்

189
5 ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் 188
6 பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல், பிரிட்டன் 187
7 பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா 186
8 ஆஸ்திரியா, கனடா, செக் குடியரசு 185
9 ஹங்கரி 183
10. லிதுவேனியா, போலந்து ஸ்லோவாகியா 182

கடைசி 10 நாடுகளின் பட்டியல்:

வரிசை எண் நாடுகள் விசா ஃப்ரீ ஆக்சஸ் நாடுகள் எத்தனை?
103 காங்கோ, லெபனான், இலங்கை, சூடான் 42
104 வங்கதேசம், கொசோவா, லிபியா 41
105 வட கொரியா 40
106 நேபாளம், பாலஸ்தீன் 38
107 சோமாலியா 35
108 ஏமன் 34
109 பாகிஸ்தான் 32
110 சிரியா 30
111 இராக் 29
112 ஆப்கானிஸ்தான் 27

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.