நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும், அவரது நண்பர்களும் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்
20 நாட்களுக்கும் அதிகமாக சிறையில் இருந்த ஆர்யன் கான் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சமீபத்தில் இவ்வழக்கில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்குதல் செய்தனர். இதில் ஆர்யன் கான் உட்பட ஆறு பேர் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களது பெயர் இடம்பெறவில்லை அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு இருப்பதால் ஆர்யன் கானும், அவரது தந்தை ஷாருக் கானும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோர்ட்டில் இருந்த ஆர்யன் கான் பாஸ்போர்ட்டும் திரும்ப பெறப்பட்டுவிட்டது. பிரச்னையில் இருந்து முற்றிலும் வெளியில் வந்திருப்பதால் ஆர்யன் மீண்டும் தனது சகஜமான வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார். நைட் கிளப் மற்றும் பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார். ஆர்யன் கான் கிளப் ஒன்றில் மது அருந்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. இதைபார்த்து சிலர் விமர்சனம் செய்தாலும், சமூக வலைதளங்களில் அதிகமானோர் ஆர்யன் கான் மகிழ்ச்சியாக இருக்க அவருக்கு உரிமை இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். வீடியோவில் ஆர்யன் கான் முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் அது ஆர்யன் கான் தான் என்று அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வீடியோ எடுத்தவர்களும் பார்ட்டிக்குத்தானே சென்றார்கள் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதிகமானோர் `ஆர்யன் கானை வாழவிடுங்கள்!’ என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆர்யன் கான் பாலிவுட்டில் கதாசிரியர், இயக்குநராகக் களமிறங்க ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்துவது என்று முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.