பிரிட்டன் நாட்டில் வரலாற்றில் முதன்முறையாக 40 டிகிரி செல்ஷியல் வெப்ப நிலை பதிவாகி உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிரிட்டன்பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக பல இடங்களில் வெப்பக்காற்று வீசி வருகிறது.
வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெப்பத்தை தணிக்க மக்கள் கடற்கரைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத வெப்ப அலையை எதிர் கொண்டு வருகின்றன. நாளுக்கு நாள் வெப்ப நிலை புதிய உச்சத்தை தொட்டு மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற நகரங்கள் இவ்வாறான வெப்ப நிலையை சந்திப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை தருகிறது.
Ranil Wickremesinghe: இலங்கை 8வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு
கடந்த 2019 ஆம் ஆண்டு லண்டன், அதன் உச்சபட்ச வெப்பநிலையான 38.7 டிகிரி செல்ஷியஸை எட்டியது. தற்போது வீசி வரும் வெப்ப அலையானது அந்த புள்ளியை கடந்து 40 டிகிரி செல்ஷியஸை எட்டியுள்ளது. இத்தகைய வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் லண்டனின் குடியிருப்பு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடும் வெப்பம் நிலவியதால் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவி அந்த இடமே புகை மண்டலமாக மாறியுள்ளது. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரெட் அலெர்ட் நிலையில் உள்ள லண்டன் நகரில், பெரும்பாலான ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.