தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, இன்று அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், கேரளம், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், மிசோரம், அசாம், ஆந்திரம், ஹிமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த மாநிலங்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரமாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார்.
மேலும், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், அருணாச்சல, அசாம், ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களில் சராசரி கொரோனா பரிசோதனை குறைந்துள்ளது இருப்பதுவும், மிசோரம், அருணாச்சல, அசாம் ஆகிய மாநிலங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை குறைந்துள்ளது இருப்பதாகவும் சுட்டிக்காட்டி பேசினார்.
மேற்குறிப்பிட்ட 9 மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. இந்த மாநிலங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று, நீதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பைக் குறைக்க, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 115 மாவட்டங்களில் பரிசோதனையை தீவிரப்படுத்தி, தடுப்பூசி போடுவதை அதிகரிக்குமாறும் செயலர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.