580 பில்லியன் ஆக குறைந்த அமெரிக்க டாலர் கையிருப்பு- எச்சரிக்கும் எஸ்பிஐ தலைவர்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80 ஆக சரிந்துள்ளது. வரும் நாள்களில் இது ரூ.80 ஆக கூட சரிய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தலைவர் தினேஷ் குமார் ஹாரா இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு சிறப்பு பேட்டி அளித்திருந்தார்.

அப்போது செயற்கையான செயல்கள் மூலம் இந்த சரிவை ஈடுகட்ட முடியாது என்றார். இது குறித்து பேசிய அவர், “இந்திய பணமதிப்பு சரிந்துவரும் விவகாரத்தில் செயற்கையான தலையீடு எந்த வேலையையும் செய்யாது என நினைக்கிறேன். மேலும் செயற்கையான தலையீடுகள் குறைந்த கால தாக்கத்தையை ஏற்படுத்தும், நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தாது.ஆகவே நாம் வர்த்தக நிலையில் கவனம் செலுத்த வேண்டும். வர்த்தக சமநிலை சரியாக இருந்தால் நமக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் டாலரை சந்தையில் விற்று பொருள்கள் மற்றும் ரூபாயை வாங்குவதன் மூலம் நம்மால் சிறப்பாக செயல்பட முடியாது. ரிசர்வ் வங்கியின் கையிருப்பு குறைந்துவருகிறது. 600 பில்லியன் டாலரில் இருந்து தற்போது 580 டாலராக குறைந்துவிட்டது.
கடந்தாண்டு செப்டம்பரில் அமெரிக்க டாலர் கையிருப்பு 642.4 பில்லியன் டாலர் ஆக இருந்தது. தற்போது 580 பில்லியன் டாலர் மட்டுமே கையிருப்பு உள்ளது. அதேபோல் கடந்த காலகட்டத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.72 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.8 அதிகரித்து ரூ.80 ஆக சரிந்துள்ளது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் தாக்கத்தை குறிப்பிட்ட காலம் கழித்துதன் கணக்கிட முடியும். மேலும் வெளிநாட்டு முதலீடுகள் இந்திய பணத்தின் மதிப்பு உயர்வதற்கு வழிவகுக்கும். ஆகவே எஃப்டிஐ மற்றும் எஃப்பிஐ முதலீடுகள் ரூபாயின் ஸ்திரத்தன்மைக்கு உதவும்.
இதற்கிடையில் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து பல்வேறு பங்குகளில் வெளிநாட்டு முதலீடுகள் ரூ.2.64 லட்சம் கோடி வெளியேறியுள்ளது. பொதுவாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை கூர்ந்து கவனிப்பார்கள். அதன் பின்னர் முதலீடு செய்வார்கள். ஆகையால் வருங்காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யலாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.