மத்திய அரசின் ஒற்றை முடிவு.. தங்கத்தின் தேவை குறைக்கலாம்..!

தங்கத்தினை பிடிக்காத இந்தியர்கள் உண்டா எனில் அது கொஞ்சம் கடினம் தான். ஏனெனில் இந்தியர்களின் பாரம்பரியம் உணர்வுகளோடு கலந்துள்ள தங்கம், அவர்களின் வாழ்வின் அனைத்து தருணங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அது குழந்தையின் பிறப்பு முதல் கொண்டு, வயதானவர்கள் இறப்பு வரையில் ஒரு முக்கிய உலோகமாக உள்ளது.

அப்படிப்பட்ட தங்கத்தின் தேவையானது நடப்பு நிதியாண்டில் சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. குறைஞ்சிருக்கா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

தேவை குறையலாம்

தேவை குறையலாம்

இது குறித்த ஆய்வறிக்கையில் தங்க ஆபரணத்தின் தேவையானது நடப்பு நிதியாண்டில் 5% குறைந்து, 550 டன்னாக குறையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு தங்கத்தின் இறக்குமதி வரியினை, இறக்குமதியினை குறைக்கும் பொருட்டு அதிகரித்த நிலையில் இந்த கணிப்பு வந்துள்ளது.

கிரிசில் அறிக்கை

கிரிசில் அறிக்கை

இது குறித்து கிரிசில் அறிக்கையானது தங்கத்தின் மீதான இறக்குமதி வரியினை மத்திய அரசு 5%ல் இருந்த்யு 12.5% ஆக அதிகரித்தது. இதனால் தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விகிதமானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டினை காட்டிலும் தேவையும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில்லறை விற்பனையாளர்கள்
 

சில்லறை விற்பனையாளர்கள்

தங்கத்தின் மீதான வரி அதிகரித்துள்ள நிலையில், அதன் சுமையை சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் மீது ஏற்றலாம். இது தங்கத்தின் தேவையை குறைக்கலாம். இது வாங்குபவர்களிடம் இருந்து கூடுதலாக செலவழிக்க வழிவகுக்கலாம்.

கூடுதல் வரியானது விலையினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது மக்களின் வாங்கும் திறனை குறைக்கலாம்.

கொரோனா காலத்தில் சரிவு

கொரோனா காலத்தில் சரிவு

கடந்த ஆண்டில் தங்கத்தின் தேவையானது 580 டன்னாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 550 டன்னாக இருக்கலாம்.

கொரோனாவின் வருகைக்கு பிறகு தங்கத்தின் தேவையானது மோசமான பாதிப்பினை கண்டிருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மோசமான தாகத்தினை எதிர்கொண்டிருந்தது. எனினும் பிப்ரவரி 2021ல் இறக்குமதி வரியானது 5% ஆக குறைக்கப்பட்ட நிலையில் தேவையானது மீண்டு வரத் தொடங்கியது.

மார்ஜினில் தாக்கம்

மார்ஜினில் தாக்கம்

எனினும் தேவை குறைந்திருந்தாலும் விலை உச்சத்தில் இருந்ததால், அது பெரியளவில் விற்பனையாளர்களை பாதிக்கவில்லை. விற்பனை குறைந்தாலும் வருவாய் குறையவில்லை. அதே சமயம் மார்ஜின் விகிதம் பாதிக்கப்பட்டது.

மீண்டும் வரி அதிகரிப்பு

மீண்டும் வரி அதிகரிப்பு

தற்போது மீண்டும் வரி விகிதம் அதிகரித்துள்ள நிலையில் விற்பனையாளர்கள் மீண்டும் விலையை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது விற்பனையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தேவை குறையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Higher tax to hit gold jewellery demand in this fiscal

Higher tax to hit gold jewellery demand in this fiscal/மத்திய அரசின் ஒற்றை முடிவு.. தங்கத்தின் தேவை குறைக்கலாம்..!

Story first published: Wednesday, July 20, 2022, 19:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.