மாணவர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர்.
அங்கு சந்தேகப்படும்படி செயல்பட்டவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மாணவர்களை குறிவைத்து போதை சாக்லேட் விற்பனை செய்துவந்தது அம்பலமானது. இதனையடுத்து போதை சாக்லேட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சேத்தன் என்ற கஞ்சா வியாபாரியை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 40 கிலோ போதை சாக்லேட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் சாக்லேட்டில் கஞ்சா கலந்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேபோல் இவருக்கு வேறு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்று வேறு இடங்களில் கஞ்சா சாக்லேட் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
newstm.in