வீட்டுக் கடனை கட்ட மறுக்க என்ன காரணம்.. சீன ஹோம்பையர்கள் சொல்லும் காரணம் என்ன?

சர்வதேச அளவில் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றான சீனாவில், சமீபத்திய ஆண்டுகளாக மந்த நிலை நிலவி வருகின்றது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் மிக மோசமான நிலை இருந்து வருகின்றது.

குறிப்பாக சீனாவில் வீட்டுக் கடன் வாங்கிய மக்கள் வீட்டுக் கடனை செலுத்த முடியாது என கூறியது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகின.

சீனாவின் ரியல் எஸ்டேட்-ல் நிலவி வரும் இந்த நெருக்கடியான நிலைக்கு என்ன காரணம்? ஏன் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் அதனை கட்டுவதை தவிர்க்கின்றனர்? என்ன காரணம்? இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஆபீஸ், வீடு, வாகனம் எல்லாமே சோலார்.. அசத்தும் ஊழியர்.. மாதம் ரூ.18,000 மிச்சம்.. எப்படி?

வாடிக்கையாளர்களும் லேட்

வாடிக்கையாளர்களும் லேட்

சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சில வாடிக்கையாளர்கள் கடனை திரும்ப செலுத்த மறுக்கிறார்கள். இதனால் டெவலப்பர்களும் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இது வீடு வாங்குபவர்களிடம் இருந்து தொடங்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது.

ஏன் காத்திருப்பு?

ஏன் காத்திருப்பு?

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே குழுமம் உள்ளிட்ட மிகப்பெரிய டெவலப்பர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் செலுத்த வேண்டிய நிலுவை என்பது அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை என்பது அதிகம் வைத்துள்ளனர்.

ஏன் செலுத்த முடியாது?
 

ஏன் செலுத்த முடியாது?

சிறு வணிகர்கள் மற்றும் சப்ளையர்களில் ஒரு குழு எவர்கிராண்டேயின் பண நெருக்கடியால், தங்கள் பாக்கெட்டுகளில் இருந்து பணம் வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாங்கள் செலுத்த வேண்டிய கடனை நிறுத்துவதாக ஒரு கடிதத்தினை வழங்கியுள்ளனர்.

எவர்கிராண்டே தான் பொறுப்பு

எவர்கிராண்டே தான் பொறுப்பு

நாங்கள் அனைத்து கடன்களையும் நிலுவையும் செலுத்துவதை நிறுத்த முடிவு செய்தோம். மேலும் கடன் அல்லது வணிக பில் என அனைத்தையும் நிராகரிக்குமாறு எங்களது சகாக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்று ஜுலை 15ம் தேதியிட்ட கடித்தத்தில் ஒப்பந்ததாரர்கள் கூறியுள்ளதாக மீடியாக்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது டெவலப்பர்களின் ஹூபேய் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற எல்லாவிதமான எதிர்வினைக்கு எவர்கிராண்டே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

கடனை கட்டாமல் தவிர்ப்பு

கடனை கட்டாமல் தவிர்ப்பு

எனினும் இது குறித்து எவர்கிராண்டே எந்த விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் தான் வீட்டினை வாங்கியவர் கடனை கட்டாமல் ஒதுக்கியுள்ளனர். வீட்டு வேலைகள் முடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இது மேற்கொண்டு சீன பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளுக்கு கோரிக்கை

வங்கிகளுக்கு கோரிக்கை

இதற்கிடையில் சில தரப்பு வங்கிகளிடம் பில்டர்களுக்கு ஒப்பந்தத்தினை முடிக்க, அதாவது பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமான பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. அதேபோல வீட்டு உரிமையாளர்களுக்கும் பேமெண்டை வழங்க கிரேஸ் பீரியர்டை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why are China’s home buyers or developers avoiding loan repayments?

Why are China’s home buyers or developers avoiding loan repayments?/வீட்டுக் கடனை கட்ட மறுக்க என்ன காரணம்.. சீன ஹோம்பையர்கள் சொல்லும் காரணம் என்ன?

Story first published: Wednesday, July 20, 2022, 21:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.