பெங்களூரு : பெங்களூரு நகர மாவட்ட புதிய கலெக்டராக, இரண்டாவது முறையாக சீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.நிலத்தகராறு பிரச்னையில் குறிப்பிட்ட நபருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவதற்காக, ஊழியர்கள் வாயிலாக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறி, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டராக இருந்த மஞ்சுநாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது.ஏ.சி.பி., எனும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சமீபத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால், அவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.காலியாக இருந்த அப்பதவிக்கு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சீனிவாஸ், ௫௦, நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன், கலெக்டராக இருந்த விஜய்சங்கர், லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான போதும், இதே சீனிவாசை கலெக்டராக நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது.மேலும், பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் துளசி மத்தினேனி, பிற்படுத்தப்பட்ட நலத்துறை செயலர்; பெஸ்காம் நிர்வாக இயக்குனர் ராஜேந்திர சோழன், பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர்; கதக் மாவட்ட கலெக்டர் சுந்தரேஷ்பாபு, கொப்பால் கலெக்டர்.காத்திருப்போர் பட்டியலில் இருந்த மஹந்தேஷ் பீளகி, பெஸ்காம் நிர்வாக இயக்குனர்; கர்நாடக மருந்து வினியோக நிறுவன நிர்வாக இயக்குனர் நாகராஜா, சிக்கபல்லாபூர் கலெக்டர்; கும்டா உதவி கலெக்டர் ராஹுல் ரத்னம் பாண்டே, கிருஷ்ணா மேலணை திட்ட மறுசீரமைப்பு பொது மேலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், மத்திய நிதித்துறையில் பணியாற்றிய ஐ.ஆர்.எஸ்., அதிகாரி ஜெய்ராம் ராய்பூர், பெங்களூரு மாநகராட்சியின் நிதி பிரிவு சிறப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டுஉள்ளார். இவருக்கு, முதல்வரின் செயலராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement