பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர் இனம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலி நாட்டின் வடக்குப் பகுதி ஒன்றில் டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் என்று கூறப்படுகிறது.
சிலி நாட்டில் 5 பேர் கொண்ட ஒரு குழு ஆய்வு மேற்கொண்டது. அப்போது 30 கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என வல்லுநர் குழு தகவல் அளித்தது.
இது குறித்து தகவல்களை ஆய்வாளர் கிறிஸ்டியன் கலாசார் கூறியுள்ளார். இது தனது அனுபவத்தில் இல்லாத ஒன்று எனவும், பத்து நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்புகள் மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அழிந்துபோன டைனோசர் இனத்தின் கால் தடங்களை கண்டு பிடித்து இருப்பது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.