பிடித்த படத்துக்கு குறைவான சம்பளம் வாங்குகிறேன்: பிரகாஷ்ராஜ்

தெலுங்கு சினிமாவில் நடிகர், நடிகைகளின் சம்பள பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர் சங்கம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் போராட்டம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் தெலுங்கு படங்களில் நடிக்க ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்குகிறார் என்கிற விவாதம் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: நடிப்பு என்பது ஒரு தொழில், அதில் வாழ்வதற்கான சம்பளம் சற்று கூடுதலாகவே கிடைக்கிறது. கமர்ஷியல் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்குவது உண்மைதான். ஆனால் எனக்கு பிடித்த படங்களில் நடிக்க மிக குறைவான சம்பளமே வாங்குகிறேன். காஞ்சிவரம், இருவர், பொம்மரிலு, இதுமாதிரி படங்கள் தான் எனக்கு பிடித்த படங்கள்.

சுற்றிலும் உள்ள உலகம் மாறி வருவதை புரிந்து கொள்ளாமல் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தோல்வி அடைகிறது. நட்சத்திர அஸ்தஸ்துக்கான பொருள் இப்போது மாறி விட்டது. வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடிப்பவர்களே இப்போது பெரிய நடிகர்களாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களால்தான் நிலைத்து நிற்க முடியும், சூர்யா, பகத் பாசில், விஜய்சேதுபதி, யஷ், சாய்பல்லவி போன்றவர்கள் இதை உணர்ந்து படங்களை தேர்வு செய்து நடிக்கிறார்கள். நானும் ஒரே மாதிரியாக நடிக்க விரும்பமால் வித்தியாசமான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.