பாங்காக்: உலக பாரா துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா அணி மேலும் இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற 50 மீட்டர் SH-1 பிரிவில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 50 மீட்டர் SH-1 பிரிவு கலப்பு அணி போட்டியில் சிங்ராஜ் அதானா, மணீஷ் அகர்வால் மற்றும் தீப்பேந்தர் ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.