உதட்டின் மேல் முடி வளருவதை தடுக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்


பொதுவாக சில பெண்களுக்கு கன்னத்திலும், தாடையின் கீழும், உதட்டுக்கு மேல் மீசை போன்றும் அதிகப்படியான முடிகளைப் காணலாம்.

அதிகமான ஹார்மோன் உற்பத்தி காரணத்தினால் இப்படி முடி வளரும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். 

முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினாலும் இவை தற்காலிக தீர்வாகவே இருக்குமே தவிர நிரந்தரமாக இருக்காது.

இந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே இயற்கை மருத்துவ முறைகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.      

உதட்டின் மேல் முடி வளருவதை தடுக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள் | Want To Prevent Upper Lip Hair Growth

  • மஞ்சள் தூளை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து அதிக குழைவில்லாமல் மேல் உதட்டில் தடவிக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் அப்படியே விட வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு முடி வளரும் திசைக்கு எதிர்திசையில் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வருவது நல்ல பலனை அளிக்கும்.
  • முட்டையின் வெள்ளைக்கருவை மக்காச்சோள மாவு மற்றும் சர்க்கரையுடன் சேர்ந்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முடி யுள்ள இடத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் வரை காய விட வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு அதை உரித்து எடுங்கள்.இதை வாரத்திற்கு 2 முறை செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.  
  • ஒரு கிண்ணத்தில் ஜெலட்டின் மற்றும் பாலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் மைக்ரோ வேவ் ஓவனில் வையுங்கள். சூடான இந்த பேஸ்ட்டை மேல் உதட்டில் தடவ வேண்டும். காய்ந்த பிறகு அதை மெதுவாக உரித்து எடுங்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இதைச் செய்து வருவது நல்லது.  
  • ஒரு கடாயில் சர்க்கரையை சேர்த்து ஒரு நிமிடம் வரை சூடாக்க வேண்டும். அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளுங்கள். கலவை நன்றாக கெட்டியாகும் வரை கிளறி வேண்டும். பிறகு ஆறியதும் இந்த கலவையை மேல் உதட்டின் மேல் தடவி வர வேண்டும். பிறகு ஒரு துணியை அதன் மேல் வைத்து வட்ட இயக்கத்தில் தேய்க்க வேண்டும். முடி வளர்ச்சியின் திசைக்கு எதிராக இழுக்க வேண்டும். கொஞ்சம் வலியும் இருக்கும் என்பதால் கவனமாக செய்ய வேண்டும்.  
  • ஒரு பாத்திரத்தில் தேன், தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை மேல் உதட்டில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 15-20 நிமிடங்கள் வரை காத்திருந்து பின்பு தேய்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை செய்து வாருங்கள்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.