பீஜிங்:இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் வழியாக புதிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நம் அண்டை நாடான சீனாவுடன் எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. கிழக்கு லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கி கொள்வது குறித்து பேச்சு நடந்து வருகிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் ஹாங்காங்கில் வெளியாகும் பத்திரிகையில் சீனா புதிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தன் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. வரும் 2035ம் ஆண்டுக்குள் 4.51 லட்சம் கி.மீ. நெடுஞ்சாலைகளை அமைக்க புதிய திட்டத்தை சீனா உருவாக்கியுள்ளது.
திபெத்தின் லூன்சேயில் இருந்து சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தில் உள்ள கஷ்கர் இடையே மிகப் பெரிய நெடுஞ்சாலை உள்பட 345 சாலை திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய நெடுஞ்சாலையானது இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் சிக்கிம் மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. சில இடங்களில் இந்திய எல்லைக்குள் வருமாறும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement