ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.80 கீழ் சரிவு.. ஆனால் யூரோ பிற நாணயங்களுக்கு எதிராக ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 80-ஐ தாண்டி வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகின்றது.

இது ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

இது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

மத்திய அரசின் 5% ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் கேரளா.. ஜிஎஸ்டி விதிக்க மாட்டோம் – பாலகோபால் அறிவிப்பு

டாலருக்கு எதிராக வீழ்ச்சி

டாலருக்கு எதிராக வீழ்ச்சி

சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான காரணிகளுக்கு மத்தியில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது 80 ரூபாய்க்கும் கீழாகவும் வீழ்ச்சி கண்டுவிட்டது. டாலருக்கு எதிராக வீழ்ச்சி கண்டிருந்தாலும், ஜிபிபி மற்றும் யென் யூரோ உள்ளிட்ட கரன்சிகளுக்கு எதிராக வலுவாகத் தான் காணப்படுகின்றது.

ஆரோக்கியமான அன்னிய செலாவணி கையிருப்பு

ஆரோக்கியமான அன்னிய செலாவணி கையிருப்பு

கடந்த சில வாரங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நல்ல ஆரோக்கியமான நிதி கையிருப்பு உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகள் டாலர் பற்றாக்குறைய போக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய ரூபாயின் அடிப்படைகள் வலுவாக அப்படியே உள்ளன. சமீபத்திய திருத்தம் என்பது உலகலாவிய சவாலான நிலைக்கு மத்தியில் ஏற்பட்ட ஒரு மாற்றம்.

ரேஞ்ச் பவுண்டில் இருக்கலாம்
 

ரேஞ்ச் பவுண்டில் இருக்கலாம்

ரூபாயின் மதிப்பு ஒரு ரேஞ்ச் பவுண்டில் இருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதை ஒரு வாய்ப்பாக பார்ப்பார்கள். இந்த நிலையில் முதலீடு செய்ய நினைக்கலாம்.

சரிவுக்கு காரணம்

சரிவுக்கு காரணம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதற்கு முக்கிய காரணங்கள் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை. பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய பணப்புழக்கம் மற்றும் அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் என பல காரணிகளும் முக்கிய காரணங்களாகும்.

மற்ற கரன்சிகளுக்கு எதிராக ஏற்றம்

மற்ற கரன்சிகளுக்கு எதிராக ஏற்றம்

டாலருக்கு எதிராக சரிவினைக் கண்டிருந்தாலும், இன்றும் யூரோ, ஜிபிபி, மற்றும் யென் போன்ற பெரும்பாலான முன்னணி காரணிகளுக்கு எதிராக உயர்ந்துள்ளது என்று அம்பிட் அசெட் மேனேஜ்மென்ட் நிதி மேலாளர் ஐஸ்வர்யா ததீச் கூறியுள்ளார்.
டாலரின் பற்றாக்குறைக்கு மத்தியில் அன்னிய செலாவணி கைகொடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rupee ரூபாய்

English summary

Indian Rupee falls below 80 per dollar but it appreciated against euro and other currencies

Indian Rupee falls below 80 per dollar but it appreciated against euro and other currencies/ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.80 கீழ் சரிவு.. ஆனால் யூரோ பிற நாணயங்களுக்கு எதிராக ஏற்றம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.