இன்று முதல் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் பைசர் தடுப்பூசி நிலையங்கள்

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட் 19 தடுப்பூசி மருந்தை கொழும்பு மாநகர சபை தடுப்பூசி நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிராந்திய தொற்று நோய் நிபுணர் டாக்டர் டினு குருகே இன்று தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியைப் பெறத் தகுதியுடையவர்கள் 20 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் , கடைசி கொவிட் தடுப்பூசி பெற்று மூன்று மாதங்கள் முடிந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொது மக்கள் தங்களின் முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது Pfizer கொவிட் தடுப்பூசியினை பெறுவதற்கு ஜிந்துபிட்டியில் உள்ள MOH அலுவலகம், MCH மற்றும் டீன்ஸ் வீதியில் உள்ள MOH அலுவலகம், நியூ பஜார் மகப்பேறு இல்லம், வெள்ளவத்தையில் உள்ள MOH அலுவலகம், Campbell Park மற்றும் கிருல வீதியில் உள்ள MOH அலுவலகம் ஆகியவற்றுக்குச் செல்லுமாறு மக்களை அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் இன்று காலை 9:00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை 19 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நான்காவது டோஸ் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும், நோயெதிர்ப்பு குறைபாடு மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசியினை வழங்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.