இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தனது முதல் பெரிய ஹாலிவுட் படமான தி கிரே மேன் என்ற படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த தனுஷ், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால்பதித்தார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் தனது 2-வது ஹாலிவுட் படமாக தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார். ஒரு கொலையாளியாக சில வசனங்கள் மற்றும் பல அதிரடி காட்சிகளில் நடித்துள்ள தனுஷ்க்கு இந்த படம் ஹாலிவுட்டில் மிகப்பெரிய படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், தனது முதல் பெரிய ஹாலிவுட் அனுபவம் மற்றும் தி கிரே மேன் படத்தின் இயக்குநர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸ் செட்டில் பணிபுரிவது எப்படி இருந்தது என்பது குறித்து நடிகர் தனுஷ் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய நடிகர் தனுஷ் கூறுகையில்,
மொழியும் நாடும் தான் வழக்கமாகப் பழகியதை விட வித்தியாசமாக இருந்தாலும், செட்டுகளின் முதல் நாளில் மிகவும் அமைதியாக இருந்தேன். ஆனால் சிறிதும் பதட்டப்படவில்லை. இந்த வாய்ப்பின் மூலம் எனக்கு ஒரு பொறுப்பு இருப்பதாக உணர்ந்தேன். மேற்கு நாடுகள் இப்போது இந்தியாவில் உள்ள பல திறமைசாளிகளை திறமைகளை கவனித்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இங்கு வருவதற்கு நான் அதிக ஊக்கம் வழங்க வேண்டும் என்று உணர்ந்தேன், அதுதான் என் மனதில் இருந்தது. மற்றபடி நான் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. ருஸ்ஸோ சகோதரர்களுடன் பணிபுரிவது மிகவும் எளிமையாவும் மென்மையாகவும் இருந்தது. அவர்கள் கதாபாத்திரங்களைப் பற்றி பேசுவார்கள் எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக விளக்குவார்கள் அவர்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” எனறு கூறியுள்ளார்.
இந்நிலையில் தி கிரே மேன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக ருஸ்ஸோ பிரதர்ஸ், விரைவில் இந்தியா வர உள்ளனர். கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ஜர், கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், மற்றும் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் போன்ற படங்கள் சிறந்த வரவேற்பைப் பெற்ற மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படங்களில் சிலவற்றை இயக்கியுள்ளனர்.
இந்நிலையில், மார்வெல் திரைப்படங்களில் ஈடுபடும் செயல்களுக்கும், தி கிரே மேனில் பயன்படுத்தப்படும் செயல்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி ஜோ ருஸ்ஸோ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “கிரே மேன் உண்மையான உலக செயல்களைக் வெளிக்கொண்டு வரும். மேலும் மார்வெல் போல் இல்லாமல் அனைவரும் இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். பிரச்சினைகளிள் போது சக்திகளைப் பயன்படுத்தி ஆபத்தில் இருந்து அதிசயமாக தப்பிக்க முடியும். ஆனால் இது அப்படி அல்ல.
கிரே மேன் மனிதர் என்பதால், திரைப்படத்தில் பல்வேறு தடைகளை சந்திப்பார். அவர் ஒரு விமானம், கிணறு உள்ளிட்ட பல கட்டத்தில் இருந்து தப்பிக்க வேண்டும். அதேபோல் ரியான் கோஸ்லிங்கின் கேரக்டர் ஆபத்தில் இருந்து தப்பிக்க புத்திசாலித்தனம் மற்றும் திறமையின் கலவையைப் பயன்படுத்த வேண்டும், கிரே மேன் நம்மைப் போன்றவர் முழு விஷயத்தையும் சுவாரஸ்மாக்குவார் என்று ருஸ்ஸோஸ் கூறினார்: சூப்பர் ஹீரோ படங்களை தயாரிப்பதில் இருந்து தி கிரே மேன் ஒரு நல்ல மாற்று.
ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், ரெஜ்-ஜீன் பேஜ், அனா டி அர்மாஸ் மற்றும் ஜெசிகா ஹென்விக் ஆகியோர் நடித்துள்ள தி கிரே மேன், ஜூலை 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் பிரீமியர் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil