கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி (11.04.2022) காலை 06.00 மணி முதல் இன்று (20.07.2022) காலை 06.00 மணி வரை சட்டவிரோதமாக எரிபொருள் சேகரித்தல், களஞ்சியப்படுத்த மற்றும் விற்பனை செய்தik தொடர்பாக நாடளாவிய ரீதியில் பொலிஸார் 1077 முற்றுகைகளை மேற்கொண்டனர்.
இதன் போது 997 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முற்றுகைகளின் மூலம் 33,847 லீற்றர் பெற்றோல், 109,634 லீற்றர் டீசல் மற்றும் 19,214 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.