பெங்களூரு, : கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடித்துள்ள ‘விக்ராந்த் ரோணா’ என்ற பான் இந்தியா படம், வரும் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் பகுதி ஆக்ஷன் காட்சிகள், 7 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. அனுப் பண்டாரி இயக்கத்தில் ஷாலினி ஜாக் மஞ்சு, அலங்கார பாண்டியன் தயாரித்துள்ளனர். கிச்சா சுதீப், நிருப் பண்டாரி, நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ளனர். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார்.
